பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நினைவுக் குமிழிகள்-2

நிரந்தரமற்ற நிலையில் பணியாற்றி இங்கு நிரந்தர நிலை ஏற்படும் என்று கருதித் துறையூர் வந்து சேர்ந்தார். இவ் விவரங்களை அவரிடம் உரையாடியபோது அறிந்து கொண்டேன். பின்னர் சின்னதுரையைக் கலந்து இடை நிலைக் கல்வி பெற்றவராதலால் ரூ. 35/- என இவர் ஊதியத்தை அறுதியிட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து என்னை பார்த்த பிச்சுமனியிடம் ஆணையை நேரில் தந்தேன். அவரும் உடனே பணியிலமர்ந்து கொண்டார். பணியிலமர்ந்த நாள் தொட்டு நான் துறையூர்ப் பணியைத் துறக்கும் வரை பருந்தும் நிழலும் போல் இவர் எனக்குத் தந்த ஒத்துழைப்பு, திறமையாக ஆற்றின பணிகள், இத்தனைக்கும் மேலாக அவர் என்னிடம் நடந்து கொண்ட விதம் (என்னைவிட ஏழெட்டு ஆண்டுகள் மூத்தவர்) இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளன: இவற்றை நினைக்கும் போதெல்லாம் என்னைப் பூரிப்பு அடையச் செய்கின்றன. -

இந்த ஆண்டு பள்ளி வளர்ச்சியடைந்த நிலையில் பல்வேறு அவசரப் பிரச்சினைகள் எழுந்தன. சென்ற ஆண்டு கோடை விடுமுறையிலேயே திட்டமிட்டு நான்கு வகுப்பு களுக்கான இடத்திற்காகக் கீற்றுக் கொட்டகைகள் நிறுவப் பெற்றன. இவை பள்ளியையொட்டியே அமைந்தன. உட்காரும் இடம், கைப்பிடிச் சுவர்கள் எல்லாம் சீமைக் காரை (Cemer கொண்டு ஆக்கப் பெற்றன. மாலை நேரத்தில் சூரிய ரியால் தாக்குறா வண்ணம், தட்டிகள் பொருத்தப் பெற்றன. மாணவர்கட்குத் தனியாகவும் மாணவிகட்குத் தனியாகவும் கழிப்பறைகள் திட்டமிடப் பெற்று நிறுவப்பெற்றன. இவையெல்லாம் நன்முறையில் ஒழுங்கு பட நிறைவேறுவதற்கு நான் பட்டபாட்டை அந்த ஆண்டவன்தான் அறிவான். எருத்துப் புண்ணைக் காக்கை உணராது என்பதுபோல நான் கோடை வெயிலில் உணவு

i