பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நினைவுக் குமிழிகள்-2

தாளாளர் சொன்னது: 'மாவட்டக் கல்வி அதிகாரி என்ன அநுபவம் இல்லாத இளைஞரைத் தலைமை யாசிரியராக நியமித்திருக்கின்றீர்களே. அநுபவம் மிக்க ஒருவரைப் போட்டால் பள்ளி வளர்ச்சிக்கு நன்றாக இருந்திருக்குமே” என்பதாக.

நான் கேட்டேன் : "தாங்கள் அவருக்குச் சொன்னது என்ன? அவர்இஅதற்கு மீண்டும் சொன்னதென்ன?’ என்று.

தாளாளர் : "இளைஞராக இருந்தாலும் மிக்க சுறுசுறுப் புடையவர். இப்பகுதியைச் சார்ந்தவர். ஒராண்டுக்குள் கல்வித்துறைபற்றிய விதிமுறைகளைக் கரைத்துக் குடித் திருக்கிறார். எதைக் கேட்டாலும் எப்பொழுதுகேட்டாலும் தயாராக விடை இறுக்கின்றார். பொது மக்களிடமும்,நல்ல செல்வாக்கு பெற்று விட்டார். நன்கு பாடம் சொல்வதால் மாணாக்கர்களின் அன்பையும் ஈர்த்து விட்டார். முதல் மூன்று ஃபாரங்கட்கும் அறிவியல் கற்பிக்கின்றார். தலைமை யாசிரியர் எப்பொழுது வகுப்பிற்கு வருவார்? என்று மாணாக்கர்கள் அவரை ஆ வ லு ட ன் எதிர்நோக்கி யிருக்கிறார்களாம். பள்ளியில் வைக்க வேண்டிய பதிவேடு யெல்லாம் அழகாக அச்சிட்டு அற்புதமாக வைத்திருக் கின்றார். நடைமுறையை அற்புதமாகக் கையாளுகின்றாள். இவரைப் போட்டதால் பள்ளி நடைமுறையில் ஒரு குறையும் காணமுடியவில்லை. பள்ளி ஒழுங்குமுறையையும் நன்முறை யில் வைத்திருக்கின்றார்’ என்று சொன்னேன் என்றார்.

மேலும், மாவட்டக்கல்வி அதிகாரி, 'சில ஆண்டுகட்கு அநுபவம் மிக்க ஒருவரை நியமித்து, அவர்கீழ் இவரைப் பணியாற்ற வைத்தால், இவர் திறமை இன்னும் அதிக மாகும். தாங்கள் விரும்பினால் தக்கவர் ஒருவரைப் பரிந்து ரைப்பேன்' என்றாராம்.