பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு சிறு புயல் - 57

என்னைநோக்கி, ‘அவருக்கு வேண்டிய ஒருவரைச் சில ஆண்டுகட்குப் போட்டுக் கொண்டால் மேல் வகுப்புத் தொடங்க இசைவு, பள்ளி நிரந்தர அங்கீகாரம் பெறு வதற்கும் வசதியாக இருக்குமல்லவா?’ என்று சொன்ன போது மாவட்டக் கல்வி அதிகாரியின் கருத்திற்கு இணங்கி விடுவார் போல் எனக்குத் தோன்றியது.

நான் சொன்னேன்: 'சட்டப்படி நாம் நடந்து கொண் டால், யாரும் குறுக்கே நிற்க முடியாது, சட்டத்திற்கு மீறி நாம் நடந்தால் எவராலும் உதவ முடியாது. இந்தப் பொது உண்மையைக் கருத்தில் கொண்டு பணியாற்றினால் எவருக்கும் பணியவேண்டியதில்லை.” என்று.

தாளாளர் சொன்னார்: அப்படிச் சட்டப்படி யாராலும் நடந்து கொள்ள முடியாது. ஒவ்வொரு நிலை யிலும் சிறு சிறு சலுகைகள் பெறவேண்டியிருத்கும். அவரது ஆளாக இருந்தால் அவற்றை எளிதில் பெற்றுவருவார் அல்லவா?’ என்று கூறி 'எல்லாவற்றையும் யோசித்துத் தான் ஒரு முடிவுக்கு வருதல் வேண்டும்' என்று சொல்லி எனக்கு விடை கொடுத்தார். ஆனால் அவர் மனம் அதிகாரி யின் கருத்திற்கு இணங்கிவிடுமோ என்ற ஐயம் என்பால் எழுந்தது. தாளாளர் வயதில் பாதி கூட ஆகாத நான் அவரிடம் அதிகமாகப் பேசக்கூடாது என்று முடிவு கொண்டேன்.

மூத்த பள்ளித் துணை ஆய்வாளர் சி. சிங்காரவேலு முதலியார் உதவியை நாடினேன். புதிய ஒருவரைத் தலைைமயாசிரியராகக் கொணர்வதைத் தவிர்க்க வேண்டும் என்பதைத் தாளாளருக்கு உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். காரணம், அவர் என் பள்ளியில் வந்து நான் மேற்கொண்ட பணிகளை எல்லாம் நன்கு கண்டவர். சிலர் எத்தனை ஆண்டு அநுபவம் பெற்றிருந்தாலும் பணியில் பக்தியுடன் ஈடுபடாவிடில் எதையும் சாதிக்க முடியாது