பக்கம்:நினைவுக் குமிழிகள்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 நினைவுக் குமிழிகள்-2

குழு முன்னர் வைக்க வேண்டும்' என்ற கோரிக்கையை விடுத்தேன். 'உங்களுடைய கடிதங்களை ஆட்சிக்குழு முன்னர் (Syndicate) வைக்க முடியாது என்பதை வருத்தத் துடன் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்' என்று மறுமொழி வந்தது பதிவாளரிடமிருந்து. அப்பொழுது சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளராக இருந்தவர் இரவிவர்மா என்பதாக நினைவு, இங்ங்ணம் விதிகட்குள்ளும் மரபுக் குள்ளும் சதுரங்கம் ஆடி என்னை ஆடுகளத்தினின்றும் வெளியேற்றினர்.

நான் 'விடாக் கொண்டனாக'வும் பல்கலைக் கழகம் 'கொடாக் கொண்டனாக'வும் போராட்டம் நடத்தி இறுதி யில் நான் தோல்வியுற்றேன். "நான் முயல்வது என் நன்மைக்கு மட்டுமல்ல; ஆசிரியர் சமூகத்திற்கே இம்முயற்சி உதவட்டும்' என்று சங்கல்பம் கொண்டு இதை என் பிரச்சினையாக்காமல் பொதுப்பிரச்சினை யாகட்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உடனே ஆட்சிக்குழுவிற்கு ஒரு வேண்டு கோள் கடிதம் எழுதி அதையும் இதுகாறும் பதிவாளருக்கும் எனக்கும் இடையே நடைபெற்ற கடிதப் போக்குவரத்து களையும் அச்சிட்டு வரிசைப் படுத்தித் துணைவேந்தர் உட்பட அனைவருக்ரும் அனுப்பி வைத்தேன். அப்பொழுது (1) என் ஆசிரியப் பெருந்தகை அருள்மிகு ஜெரோம் பாதிரியார், (5) நீதி மன்ற நீதிபதி பவுர் அகமது, (3) சட்டக் கல்லூரிப் பேராசிரியர் துணை முதல்வர் திரு எஸ். கோவிந்த ராஜுலுநாயுடு இவர்கள் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக இருந்தனர், இவர்களை அணுகினால் வழிபிறக்கும் என்று சில பெரியவர்கள் சொன்னதால் இவர்களை விடாமல் பிடித்துக் கொண்டேன். இவர்கள் மூவரையும்சென்னைவந்து சந்தித்தேன்:வாதாடினேன். "தாங்கள் ஆசிரியர்க்கு அளித்து வரும் சலுகையை உரிமையாகக் கேட்பது சரியே:பல்கலைக் கழக மரபு குறுக்கிடுகின்றதே. எனினும், முயல்வேன்' என்று