உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகு கவிகள் 79. களுக்கும் செருகு பாடல்களுக்கும் வேற்றுமை தெரியாமல் இவை இடம் பெற்று விட்டன. அஸ்ஸாமில் பிற மாநிலத் தார் ஊடுருவிக் குடியேறினது போல, இப்பாடல்கள் கந்தியார் பிணிப்பு என்று திருநாமமும் பெற்றுத் திகழ் கின்றன . இப்படியே வெள்ளியம்பலத் தம்பிரான் என்பவர் பல பாடல்களைப் பாடி ஒவ்வொரு தமிழ் நூலிலும் இடை இடையே சேர்த்துள்ளார் என்பது புலவர்கள் கண்டறிந்த உண்மையாகும். தம்முடைய பாடல்களும் எல்லா நூல்களிலும் சேர்ந்திருக்கட்டும் என்று அவர் கருதினாராம். இம்மாதிரி இவர் செருகிய பாடல் களை வெள்ளிப் பாடல்கள்’ என்று பெயரிட்டழைக் கின்றது புலவர் உலகம். இப்படி வெறுப்போ விருப்போ இல்லாமல் பாடல்களைப் பாடிச் சேர்ப்பவர் ஒரு புறம்: கொள்கைகளை வற்புறுத்துவதற்கென்றே பல பாடல் களைப் பாடிச் சேர்த்துள்ளனர் வேறு பலர். தம்முடைய கம்பராமாயணப் பதிப்பில் முகவுரையில் செருகு கவிகள் செருகப்பட்டதன் காரணங்களை ஆய்கின்றார் டி. கே. சி. ' கம்பராமாயணத்தில் காண் கின்ற மாதிரி வேறு எந்த நூலிலும் காண முடியாத வஸ்து ஒன்று உண்டு. அதுதான் செருகு கவி. கம்பராமாயனப் புத்தகம் செருகு கவி மயம் என்று சொன்னால் குற்றம் இல்லை’ என்று கூறியவர் காரணங்களையும் காட்டு கின்றார். - (1) கம்பரது கவிதைகள் அபூர்வமான பாவங்களைக் கொண்டவையாய் இருந்தபடியால் படிப்பவர்களின் இதயத்தைப் பற்றிக் கொண்டன. சதா பாடிக் கொண்டே இருக்கும்படி துண்டின. அதிலிருந்து ஒரு மயக்கம் உண்டாகிப் போலிச் செய்யுட்களையும் இயற்றும்படி சிலரைத் துரண்டிவிட்டன. இப்படி இயற்றிய போலிச் செய்யுட்களைப் புத்தகத்தில் கட்டம் கட்டமாகப் பார்க் கலாம்.