பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகு கவிகள் 85 {பறித்த-பிடுங்கிய வாளி-அம்பு; பருவலி-பருத்த வலிமையுள்ள; இறுப்பன்-முறிப்பேன்; நாமம்-பெயர்i. இப்படி நெஞ்சிலிருந்து பிடுங்கி எறிந்த அம்பை மிகுந்த வலிமையுள்ள பெரிய கைகளால் பிடித்து ஒடித்து விடுகிறேன்’ என்று எழுந்து நின்று வளைக்கின்றான். முடியவில்லை. இது முறியாது’ என்று சொல்லிக் கொண்டே அதில் பொறிக்கப் பெற்றுள்ள பெயரைப் பார்க்கின்றான் என்பது இப்பாடலால் அறிகின்றோம். இந்த இரண்டு பாடல்களால் அம்பை மார்பினின்றும் பிடுங்கி எடுத்து ஒடிக்க முயன்று முடியாமல் பெயரைப் பார்த்தான் என்பதுவரை அறிய முடிகின்றது. இதன் பிறகு , வாலி இராமனை நேரில் காண் கின்றான்; திட்டுகின்றான். அப்பால் இராமனுக்கும் இவனுக்கும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. வாலி ஒரு வாறு சமாதானம் அடைகின்றான். பின்னர், என்(று)அவற்(கு) இயம்பிப் பின்னர் இருந்தனன் இளவல் தன்னை வன்துணைத் தடக்கை நீட்டி . வாங்கினன் தழுவி மைந்த -டிெ-131 (இளவல் தம்பி; துணைக்கை-இரண்டு கைகள்) இதில் துயருற்று நின்ற தம்பி சுக்கிரீவனை வாலி தன்னுடைய வலிய இரு கைகளாலும் பிடித்துக் கட்டித் தழுவி, வலிமையுடையவனே!’ என்று பாராட்டி அறங் கூறுகின்றான். அப்பால். வாலியின் மகனான அங்கதன் வருகின்றான்; அலறித் துடிக்கின்றான். அவனை வாலி தேற்றி, ஆயன் பலவும் பன்னி அழுங்கினன்; புழுங்கி நோக்கித் தீஉறு மெழுகிற் சிந்தை அலமாகம் செங்கண் வாவி