பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செருகு கவிகள் 87 என்னலும் உலகம் ஏழும் ஏத்தின; இறந்து வாலி அந்நிலை துறந்து வானுக்(கு) அப்புறத்(து) உலகன் ஆனான - -டிெ-152 (தன்அடி-இராமன் திரு வடி: தாழ்தல்-வீழ்ந்து வணங்குதல்; பொறுத்தி-ஏற்றுக்கொள்). இப்படியாக வாலி வீடு பெற்ற பின்னர் ஒரு பாட்டு வருகின்றது. கைஅவண் நெகிழ்த லோடும் கடுங்கணை காலன் வாலி வெய்யமார் பகத்துள் தங்கா(து) உருவிமேக்(கு) உயர மீப்போய்த் துய்ய நீர்க் கடலுள் தோய்ந்து தூய்மலர் அமரர் சூட்ட ஐயன்வெந் விடாத கொற்றத்(து) ஆவம்வந்(து) அடைந்த(து) அன்றே. -டிெ-153 (நெகிழ்தல் - தளர்தல்; கடு - விரைவையுடைய, காலன் யமன், அமரர்-தேவர்கள்; வெந்-முதுகு ; ஆவம்அம்பு அறாத் துாணி). இப்பாடலை (செருகு பாடல்) வைத்து வைத்துப் பார்த்துப் பார்த்துச் சுவைக்கலாம்; அல்லது சிரிக்கலாம்; வேண்டுமானால் அழவும் செய்யலாம்' என்கின்றார் சொ. முரு. . வாலி தன் மார்பில் பாய்ந்த அம்பைப் பிடுங்கு கின்றான் (67). பிடுங்கிய வாளியை ஒடிக்க முயல்கிறான்; முடியவில்லை (70). இரு கைகளையும் நீட்டித் தம்பியைத் தழுவுகின்றான் (131). மகனைப் பற்றி நெஞ்சில் அணைத்துத் தழுவுகின்றான் (146). தன்னுடைய இரு