பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 8 நினைவுக் குமிழிகள்-3 கைகளாலும் மகனைப் பிடித்து மார்பில் சேர்த்துப் புல்லுகின்றான் (150). மோட்சம் அடைகின்றான் (152). இத்தனை நிகழ்ச்சிகட்குப் பின் வருகின்ற பாடலில் அம்பைப் பிடித்திருந்தகை இப்பொழுதுதான் நழுவினதாக வும், உடனே அம்பு உடலைஉருவிப்பின்புறம்போய், கடலில் மூழ்கித் தேவர்களிடத்தில் ஆசி பெற்று அம்பறாத் துரணி யில் வந்து துழைந்ததாகவும் வருகிறதே! இது வியத்தற் குரியதுதானே!' என்கின்றார் முருகப்பா, மேலும், சிறியன சிந்தியாத மாபெரும் வீரனான வாலியின் முதுகில் புண் தோன்றும்படி ஒரு நிகழ்ச்சி ஏற்படுமா? இராமன் எய்தாலும் அம்பு செல்லுமா? அம்பு சென்றாலும் கம்பர் விடுவாரா? செருகு கவிகளைச் சேர்த்தவர் பலர், அவற்றில் முன் உள்ள பாடல்களைப் பார்க்காமலேயே, பாடிச் சேர்த்த வகையைச் சேர்ந்தது கை அவண் நெகிழ்தல்’ என்ற பாட்டு என்கின்றார். (2) இந்திரசித்து வதைப் படலம், இலக்குவன் கணை யால் இந்திரசித்து மடிகின்றான். வெட்டுப்பட்ட இந்திர சித்தின் தலையை அங்கதன் எடுத்துக்கொண்டு வர, இலக்குவன் கூட வருகின்றான். இக்காட்சியைக் கவலை யோடிருந்த காகுத்தன் காண்கின்றான். அவனுக்கு எல்லை யற்ற மகிழ்ச்சி உண்டாகின்றது. ஒரே வியப்பு. கம்பர் பாடுகின்றார். வன்புலம் கடந்து மீளும் தம்பிமேல் வைத்த மாலைத் தன்புல நயனம் என்னும் தாமரை சொரியும் தாரை அன்புகொல்? அழுக ணீர்கொல்? ஆனந்த வாரி யேகொல்? என்புகள் உருகிச் சோரும் கருணைகொல்? யார் அது ஒர்வார்? -இந்திர, வதை 65