பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龛4 நினைவுக்குமிழிகள்-3 தந்தமில் இருந்து தாமும் விருந்தொடும் தமரி னோடும் அந்தணர் அமுத ருத்தி அயில்வுறும் அமலைத் தெங்கும். -நாட்டு.22 (முதிரை- பருப்பு வகை முழுத்து முழுத்து கின்ற; தயிர்க்கண்டம் -தயிர்க் கட்டி, கண்டம்-கண்ட சருக்கரை; இல்-வீடு:தமர்-பந்துகள்: அருத்தி-உண்ணச் செய்து; அயில் உறும்- உண்கின்ற; அமலைத்துஆரவாரத்தையுடையது.1 அளவு கடந்த மேம்பாடான உணவை உண்டு. ஆரவாரிக்கும் ஓசை நாடு முழுதும் கேட்கும் என்று இதில் கூறப்பெற்றுள்ளது. இது நியாயமாக நாட்டு மக்கள் உணவுக்குப் பஞ்சப்படாமல் பெருமிதமாக உண்டு களித்தனர் என்று கூறவேண்டிய இடம். இதில் அந்தணர் வீடுகள் மட்டும் இப்படி உண்ட களிப்பைக் கொண்டிருந்தன என்று கூறவேண்டியதில்லை. இந்தப் பாடலுக்கு உரை எழுதும்போது வை.மு.கோ. அவர் களுக்குச் சிறிது தினரல் ஏற்பட்டுள்ளது. பல சாதியாரும் பாடுபட்டுச் சம்பாதிக்க, ஒரு சாதியார் மட்டும் தலைகால் தெரியாமல் உண்டு கொண்டிருந்தார்கள் என்று பாடல் இருந்தால் யாரைத்தான் கலங்க வைக்காது? " ...விளை பொருள்களை அம்மள்ளர் எல்லா வருணத்தார்க்கும் பயன்படுமாறு ஏற்றபெற்றிச் செய்வரென்டதைத் தெரிவிக்கக் கருதி, முதல் வருணத் தவரான அந்தணர்க்கு அவை பயன்படுவதைக் கூறி, மற்றையோருக்குப் பயன்படுவதை உபலக்கணத்தாற் பெற வைத்தனர் என்க. ' என்று கூறுவர். நாட்டில் விளைந்த பொருள்கள் எல்லாருக் கும் பயன் பட்டன என்று கூறுவதற்குத் திறமின்றிக்