பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I (?0 நினைவுக்குமிழிகள்-3 ஐயா, சற்றுச் சிறப்பான முறையில் கவனியுங்கள்' என்றேன். அவர் மண்டையிலிருப்பவையெல்லாம் வெளிவர வேண்டுமல்லவா?’ என்றார். மூளையைச் சொல்லுகிறீர்களா?' என்றேன். இல்லை, சீழைச் சொல்லுகின்றேன்' என்றார். சின்ன டாக்டர் எங்குள்ளார்?’ என்று வினவினேன். என்னைப் பார்த் தால் டாக்டர் மாதிரி தெரியவில்லையா?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டார். தெரிகிறது. ஊரிலும் உங்கட்கு நல்ல பேர். ஆனால் கோவாப்பரேட்டிவ் விஷயங்களில் இருக்கும் கவனம் மருத்துவத்தில் இல்லை. என்பதைக் காண்கின்றேன். அதனால்தான் சின்ன டாக்டரைக் கேட்டேன்’ என்று கூறினேன் நானும் சிரித்துக் கொண்டே. அடுத்த அறையில் இருக்கின்றார் போய்ப் பாருங்கள்’’ என்றார் கோபமில்லாமல். அவரைப் பார்த்து காதை நன்கு சோதிக்குமாறு: வேண்டினேன். ஒரு பென்சிலின் ஊசி மருந்தும் காய்ச்சி ஆவியாக்கி வடித்த நீரும் வாங்கி வருமாறு சொன்னார்; அவ்வாறே வாங்கி வந்தேன். காதை நன்கு தூய்மை செய்து பென்சிலின் ஊசி மருந்தைச் சொட்டிப் பஞ்சினால் காதை மூடி அனுப்பினார். அடுத்த நாள் சென்று பார்த்த போது, சீழ் வடிவது நின்றது. சுத்தம் செய்து ஏதோ சொட்டு மருந்து இட்டு பஞ்சினால் மூடினார். இதோடு நின்றுவிடும்; இனி வரத் தேவை இல்லை என்று சொல்லி அனுப்பினார். மருத்துவர் கவனம் குறைந்தாலோ நோயாளியின் பாடு ஆபத்துதான் என்பதற்கு இஃது ஒர் எடுத்துக் காட்டு. - (2) சிறுநீர் கழிக்க முடியாமை : 1954-என்று நினைக் ఇషాGpir ஒருநாள் இராமலிங்கம் சிறுநீர் கழிக்க முடியாமல் துன்பப்பட்டான் (5-வயது சிறுவன்) . குறியைச் சோதித்தலில் இலிங்கக் கவசம் (Prepuse) epiņš கொண்டு இருந்தது; மிகச் சிறிய துவாரமே காணப் அது வழியாக நீர் சரளமாக வெளிப்பட Qplgiur لتغسلتانك