பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. நினைவுக் குமிழிகள்-3 அழைத்து வந்தேன். அவரும் மருந்துப் பெட்டியுடன் வந்திருந்தார். சா. க. குழந்தை மருத்துவத்தில் கை தேர்ந்தவர். அவருக்கும் ஒன்றுழ் புலப்படவில்லை. மணிகாட்டியின் முட்கள் வேகமாகச் சுழன்று கொண் டிருந்தன. மணி இரவு 12, 1, 2...வரை ஆகிவிட்டது. இறுதியாக ஓந்தி எண்ணெய் சிறிது அளவு வாய்" வழியாகச் செலுத்தி விட்டால் சரியாய் விடும் என்றார் கோபால கிருஷ்ண அய்யர். எல்லோரும் பொறுமையை இழந்த நிலையில் இருந்தோம். எல்லோருமே ஓந்தி எண்ணெயைச் சங்கின் மூலம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டோம். வாய் இறுக மூடி இருந்தது; பற்களை 'நர ர' என்று கடித்துக் கொண்டிருந்தான். மிக்க சிரமத். துடன் ஒன்றிரண்டு அவுன்சு எண்ணெய் இறங்கி விட்டது. ஒரு மூன்று மணித்துளிக்குள் தண்ணிர் தண்ணீராக துரை யுடன் வாந்தி எடுத்து விட்டான் சிறுவன். வயிறும் குறைந்து விட்டது; செருகிக் கிடந்த கண்களும் திறந்தன; விழித்துப் பார்த்தான். சில்லிட்டுக் கிடந்த உடலிலும் வெப்பம் தோன்றியது; கடுங்காய்ச்சல் போன்ற வெப்பம் ஏறியது. மீண்டும் பயம் தோன்றியது. P.K. நாராயண அய்யர் பயப்படவேண்டாம்; வெப்பம் இந்த உடலுக்கு வேண்டும். அஃது இயல்பாகவே வந்து விட்டது. இந்தக் கம்பளியில்அப்படியே கிடக்கட்டும். விடிந்: தால் ஒன்றும் இராது' என்று கூறினார். நான் அயோத்தி: யில் கூனியின் சூழ்ச்சியால் கைகேயியின் அந்தப்புரத்தில் மயங்கிக் கிடந்த தசரதன் பட்ட பாட்டை நினைத்துக் கொண்டேன். சா. க.வும் ஒப்புமை சரியே என்று. கூறினார். பிறகு காத்துக் கிடந்த வாடகைக் காரில் ஏற்றி அவரவர்களை அவரவர் வீடு கொண்டு போய்ச் சேர்த்தேன். குழந்தை வளர்ப்பில் எதிர்பாராமல் இத் தகைய பிரச்சினைகளையெல்லாம் சந்திக்க நேரும் என் பதை வலியுறுத்தவே இந்நிகழ்ச்சியை எடுத்துக் காட்டி னேன். - - டாக்டர்