பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

孟x நாட்டு வரலாற்றில் ஒரு நூற்றாண்டுக் காலத்தினுடைய நிகழ்ச்சிகளை, உணர்வுகளை, போக்குகளை, அலை களைப் பதிவு செய்துள்ளன. வாழையடி வாழை என வருகிற மரபில் வந்துதித்த அறிஞர் சுப்புரெட்டியார், தாம் வாழ்க்கையில் கண்டவற்றை, கேட்டவற்றை, கற்றவைகளை, உணர்ந்தவைகளை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து எழுதி மகிழ்கிறார். டாக்டர் சுப்புரெட்டியார் அவர்கள் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராக வாழ்வைத் தொடங்கிப் படிப்படியாகத் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கிப் பின்பு கலைக்களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராக உயர்ந்த செம்மல். அரை நூற்றாண்டுக் காலமாகக் கல்வி உலகில் சிறந்து வருபவர்கள். பல்துறைப் பயிற்சி மிக்கவர் கள். பல நிலைகளில் பதவி ஏற்றுச் சிறந்தவர்கள். எதனை யும் ஆழ்ந்து கற்பவர்கள். எளிதாகக் கற்பிப்பவர்கள். கல்வி இயலில் தனிநோக்குச் செலுத்துபவர்கள். இவர்தம் படைப்புகளின் பயனாக முகிழ்த்த நூல்கள் பல. எதனையும் விரிவாகவும், விளக்கமாகவும் எழுதுபவர்கள். இவர்கள் படைத்த நூல்கள் அனைத்தும் அளவாலும் பொருளாலும் பெரியவை. பெரு நூல்கள் எழுதிப்பழகிய டாக்டர் சுப்புரெட்டியார் தம் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளில் பெரும்பாலான வற்றைத் தொகுத்து நினைவுக் குமிழிகள்’’ என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார்கள். இந்நூலில் ஆசிரியரின் வாழ்வில் சிறந்த பகுதியாகிய காரைக்குடி வாழ்வு மலரும் நினைவுகளாகின்றது. காரைக்குடி கவின்மிகு நகர். கற்றோரைப் போற்றும் நகர். கம்பனுக்கு விழா எடுக்கும் நகர். செல்வர்கள் பலர் சிறப்போடு வாழும் திருநகர். தமிழ் விழாக்களும் திருவிழாக்களும் மலிந்த மாநகர். சொ. முருகப்பாவும், இராய சொக்கலிங்கமும், கம்பன் அடிப்பொடி கணேசனும், கண்ணதாசனும் வாழ்ந்த நகர்