பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்து மதாபிமான சங்கம் 夏翼歌 சிறந்த பதவியை வகித்தவர். அவர் மறைந்த பிறகு இவர் தாய்நாடு திரும்பி விட்டார். நான் காரைக்குடியில் இருந்த போது திருமகள் அச்சகம்’ என்ற ஓர் அச்சகம் தொடங்கி மிகத் திறம் படநடத்தி வந்தார். இதற்கு மகன் பொறுப்பாக இருந்தார். நான் திருப்பதியில் இருந்த போது இவருக்கு மணிவிழா நடைபெற்றது; எனக்கு அழைப்பும் வந்தது. நான் வாழ்த்துச் செய்திதான் அனுப்ப முடிந்தது. மணிவிழா நடைபெற்ற ஒன்றிரண்டு ஆண்டுகட்குப் பின்னர் சிவலோக பதவி அடைந்து விட்டார். - 6. மெ.ந. சிதம்பரம் செட்டியார்: இவர் சு. ராம. விதியில் ஒர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். சா. கணேசனுக்கு மிகவும் வேண்டியவராதலாலும், இலக்கியக் கூட்டத்தில் ஆர்வத்துடன் கலந்து கொள்பவராதலாலும் நான் காரைக்குடிவந்த ஒன்றிரண்டு திங்களிலேயே இவர் தொடர்பு ஏற்பட்டது. ராய.சொ. விடமும் நெருக்கமாகப் பழகுபவர். சங்கத்தின் ஆயுள் உறுப்பினர்; சில ஆண்டுகள் நிர்வாக சபை உறுப்பினராக வும் பணியாற்றியவர். இவரை M.N.ST. என்றால் தான் எல்லோரும் நன்கு அறிவார்கள். கழுத்தில் சிறியஅக்கமணி மாலை தரித்திருப்பவர். இவருக்கு ஒரே பெண்; சிறந்த முறையில் திருமணம் நடத்தினார். மாப்பிள்ளை ஒரு வழக்கறிஞர். 7. மெ.செ.மெ. முத்துராமன். இவர் சு.ராம. தெருவிலுள்ள ஒரு பெரிய வீட்டில் வாழ்கின்றார். தித்துப் பிள்ளையாக வந்தவர். வந்த இடத்துத் தந்தையார் பேரில் அளவற்ற பாசம் உடையவர். தெய்வ பக்தி மிக்கவர். கழுத்தில் சிறிய அக்க மணிகளாலான மாலை தரித்திருப்பவர். சங்கத்து ஆயுள் உறுப்பினர். இவ ஆண்டுகள் நிர்வாக சபை உறுப்பினராகவும் பணி யாற்றினவர். ராய.சொ.சா.க. இவர்கள்பால் அளவற்ற நி-தி