பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி வளாகத்தில் பொருட்காட்சி } i & களால் சூழ்நிலைகள் காட்டப் பெற்ற விளக்கப் படங்கள்; தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்கள் படங்கள் (கிடைத்தவரை) கொலு வைக்கப் பெற்றிருந்தன. அந்தோ! இவையெல்லாம் இரண்டு மூன்று நாட்கள் ஓயாது அடித்த புயல் மழையால் அழிந்தன. தென்வடலாகக் கூரை வேயப் பெற்ற கட்டடம் அழிந்தது. கூரை காற்றால் தூக்கி எறியப் பெற்றுச் சுவர்களே நின்றன. இந்தக் கந்தர் கோலத்தில் சா. க. அவர்கள் தந்திருந்த எழுத்தாணி, ஒலைச்சுவடிகள் கூட போன இடம் தெரிய வில்லை. அவர் மிகவும் வருந்தினார். இந்தக் கோரக் காட்சியை நேரில் பார்த்தவர்கள் அழாமல் இருக்க முடியாது. இரண்டு மாதம் பல மாணவர்கள் கடுமையான உழைப்பு வீணாகப் போய்விட்டது. இஃது என்னைத் தமிழ் வரலாற்றை நினைக்கச் செய்தது. சம்பந்தர் காலத்தில் அனல் வாதத்திற்கும் புனல் வாதத்திற்கும் தப்பிய தமிழ், கடல் கோளால் பெரும் பகுதியை இழந்தது. நிலத்தைக் கடல் ஆக்கிரமித்தது போல, புயல் தமிழ்த் துறைக் கட்டடத்தையே சேதப்படுத்தியது. கடல் கோளுக்குப் பிறகும் தமிழ் இன்றும் செழிப்புடன் வாழ்கின்றது; வளமாக வாழ்கின்றது. அங்ங்னமே துறைக் கட்டமும் சீர்திருத்தப் பெற்று இன்றளவும் (1989) துறையும் சீருடனும் சிறப்புடனும் வளர்ந்தோங்கியுள்ளது. பழைய இராமநாதபுரம் மாவட்டம் முழுதும் பெரும் பாலும் மணற்பாங்கான நிலப்பரப்புடைய பகுதியைக் கொண்டது. காரைக்குடிப் பகுதி முழுவதும் இத்தகை யதே. ஒரடி ஒன்றரையடி ஆழத்திலேயே பாறை தட்டுப் படும். ஆதலால் மரங்களின் வேர்கள் ஆழமாகச் செல்வ தில்லை. இந்தப் புயல் ஏற்பட்டபோது சாலையின் இரு புறமும் வளர்க்கப் பெற்ற மரங்களில் பெரும்பான்மை யானவை சாய்ந்தழிந்தன. நான் குடியிருந்த வீட்டில் பத்து வாழை மரங்கள் பிறர் கண்ணெச்சில் படும்படிச்