பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 R நினைவுக்குமிழிகள்-3 ஒர் இளைஞனை ஆட்கொள்ளும் என்பது உளவியல் உண்மை; மனித இயல்புங்கூட. ஆனால் பையன் அண்ணாத்துரையின் கொள்கையால் மிகவும் கவரப்பட்டித். தாலும், அரசியலில் தீவிரமாக ஈடுபடாதவன். இந்த மாணவன் சீர்திருத்தத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினான். காரைக்குடி வந்த பிறகு, கம்பனடிப்பொடி இவனது வீர வழிபாட்டுக்குள்ளவரா னார். தன் திருமணத்தை அவர்தாம் செய்து வைக்க வேண்டும் என விரும்பினான். இக்கருத்தை ஒருநாள் என்னிடம் கூறினான். காரைக்குடியிலிருந்து திருச்சிக்கு முதல் வகுப்பு- இருப்பூர்திப் பயணம் வசதி, திருச்சி யிலிருந்து செங்காட்டுப்பட்டி வரை மகிழ்வுந்து வசதி செய்து தர வேண்டியிருக்கும் என்று சொன்னேன். அப்போது செல்வராசன் திருமண விழாவுக்கும் என்னைத் தலைமை தாங்க வேண்டும் என்று மற்றொரு புதிரும்: போட்டான்; மிகவும் வேண்டினான். ஒருவாறு ஒப்புக் கொண்டேன். இருவரும் ஒரு ஞாயிறு அன்று கம்பனடிப்பொடியின் இல்லம் சென்றோம். நான்தான் பையனை அறிமுகம் செய்து வைத்தேன். 'இந்தப் பையன் செல்வராசன் துறையூரில் என் மாணவன். இளங்கலைப் பட்டத்தை முடித்துக் கொண்டு பி. டி. என்னிடம்தான் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இங்கு வந்து சேர்ந் துள்ளான். நல்ல மாணவன்; படிப்பில் ஆர்வம் மிக்கவன். இப்போது திருமணம் கூடியுள்ளது. தன் மணம் தமிழ் மணமாக நடைபெற வேண்டும் எனவும் அதனைத் தாங்கள்தான் நடத்தி வைக்க வேண்டும் எனவும் விரும்பு கின்றான். மறுக்காமல் செய்து வைத்து ஆசி கூற வேண்டும்' என்றேன். தங்களைச்செங்காட்டுப்பட்டிக்கு இட்டுச் சென்று மீண்டும் காரைக்குடி திரும்பும் வரை என் பொறுப்பில் வி ட் டி ரு க் கி ன் றான் ' என்றேன். "செங்காட்டுப்பட்டி திருச்சியிலிருந்து 36 கல் தொலைவு.