பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

** 34 நினைவுக் குமிழிகள்-3 திருமண ஏற்பாடு சிறப்பாகச் செய்யப் பெற்றி ருந்தது; கம்பனடிப் பொடி ஏற்கெனவே சொன்னபடி அமைந்திருந்தது. முதலில் பிள்ளையார் வழிபாடு நடை பெற்றது; இதனை மிக்க பக்தியுடன் செய்தார் கம்பனடிப் பொடி. பிள்ளையார் பட்டிக்காரர் அல்லவா? அதிலும் அத்திருக்கோயிலின் பால் தனி ஈடுபாடுடையவர். அடுத்து ஹோமம் வளர்த்து பல வைதிகச் சடங்குகள் நடைபெற்றன. தமிழ் மந்திரங்கள் ஒதப்பெற்றன. தமிழ் மணத்திற்கென அவர் வகுத்துக் கொண்டிருந்த முறைகள் யாவும் மிக்க பக்தியுடன் செய்யப்பெற்றன. திருமுறையி லும் தேவாரத்திலும் 'சிலபாடல்கள் ஒதப் பெற்றன. இறுதியில் வாழ்த்து நான் கம்பன் அடிப்பொடியை அவைக்கு, சா. க. சிறந்த தேசபக்தர்; காந்தி நெறிப்படி வாழ்பவர்; கதரைத்தவிர வேறு துணிகளைப் பயன் டடுத்தார். சட்டை அணியாதவர். நீங்களே இதைப் பார்க்கின்றீர்கள். சிறந்த தமிழ்ப்பற்றளார். கம்பனில் தனி ஈடுபாடு கொண்டவர். பல்லாண்டுகளாக நான்கு நாள் கம்பன் திருநாள் கொண்டாடிக் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்பவர். அழகப்ப வள்ள லுக்குக் கல்லூரிகளை நடத்துவதில்வலக்கரமாகச் செயற்படுபவர். இவர் துணை இல்லை என்றால் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்த்துறையே தோன்றி இராது, 1942 விடுதலைப் போராட்டத்தில் இவர் பங்கு அளவிடற்கரியது. மாறு வேடத்தில் தாடி வளர்த்துக் கொண்டிருந்த இவரை அரசால் பிடிக்க முடியவில்லை. இவர் கைராசிக்காரர். இவர் நடத்தி வைத்த திருமணத் திற்குரிய மணமக்களின் வாழ்வு சிறக்கும் என்பதற்கு ஐயமில்லை’ என்று அறிமுகப்படுத்தி வைத்தேன். பின்னர் கம்பனடிப்பொடி 10 நி. மணமக்களை வாழ்த்திப் பேசினார்; நானும் 10 மணித் துளிகள் பேசினேன். திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர் பாராத பலத்த மழை ஒரு மணி நேரம் பெய்து ஓய்ந்தது. திருமணம் முடிந்தவுடன் மண மகனின் மாடிவீட்டுத்