பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£44 . . . . . . ." ... நினைவுக் குமிழிகள்-3 கருதினார் இவர்; இக்கருத்தைச் செயல் முறையிலும், மெய்ப்பித்துக் காட்டிப் பெரும் புகழ் பெற்றார்; இன்று பல்வேறு இடங்கள் அம்மையார் கொள்கையைத் தழுவிப் பல குழந்தைக் கல்வி நிலையங்கள் தோன்றி நடைபெற்று வருவதைக் காண்கின்றோம். இத்தகைய பள்ளி ஒன்றைத் தான் காரைக்குடியில் வள்ளல் அழகப்பர் தோற்றுவித்தது. முன்னேற்பாட்டுப் பள்ளி தோற்றுவித்ததற்கு ஓராண்டு முன்னதாக என்பது நினைவு. - - இந்தப் பள்ளியின் திறப்பு விழாவில் ஒய்வு பெற்ற §§60 Good floodu fouš (Federal Court Judge) திரு வரதாச்சாரி சிறப்பு விருந்தினராக இருந்து பள்ளி யைத் திறந்து வைத்தார். அக்காலத்தில் இது காரைக் குடிப் பகுதியில் ஒர் அதிசயப் பள்ளியாக விளங்கியது, எங்கள் பி.டி, மாணவர்கட்கும் ஒரு சோதனைக் களமாக வும் அமைந்தது. என்னதான் மாண்டிசாரி முறையை விளக்கினாலும் பக்தியுடன் பணியாற்றும் ஆசிரியர்கள் கிடைக்காவிடில் இத்தகைய பள்ளிகள் சரியாகச் செயற். படா. இதனை டாக்டர் வள்ளல் விழாக் கூட்டத்தில் தெளிவாக விளக்கினார். நீதிபதி வரதாச்சாரியார் காரைக்குடிக்கு வரும்போது எழுபது வயதை எட்டு பவராக இருந்தார். இவரது இல்லம் (ங்கள்) மயிலாப்பூர் லஸ்ஸிலிருந்து கச்சேரி சாலையின் தொடக்கத்திற்கும், முண்டகக் கண்ணி அம்மன் சாலையின் தொடக்கத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டி இருந்தது(ன). ஆல்போல் தளிர்த்து அருகு போல் வேரூன்றி வளர்ந்திருந்த இவர் குடும்பத்தைச் சார்ந்த மகன்கள், பேரர்கள், அவர்கள் மக்கள் என்றிப்படி ஒரே இடத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.ஆகவே பள்ளியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் (ஆங்கிலத்தில் தான்), அன்பர்களே, குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை எல்லா நிலைகளிலும் எல்லாவிதக் கல்வியையும் பெறும் வாய்ப்புடையது (மருத்துவக் கல்வியைத் தவிர) இந்தக்