பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் கல்விப் பணி } 5 5 களாகப் பிரித்து ஒவ்வொன்றிற்கும் உரியவற்றைக் கோவைப் படுத்தி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு எழுதவேண்டும். உரோமாபுரி ஒரு நாளில் கட்டப்பட்ட தன்று’ என்ற மேனாட்டுப் பழமொழி அடிக்கடி நினைவிற்கு வரும். ஒரு பெரிய நூல் எழுதுதல் பெரிய வீடு கட்டுவதைப் போன்றது. கட்டடம் எப்படி அமைதல் வேண்டும் என்பதை முன்னமேயே நன்கு சிந்தித்து ஒரு கரட்டு வரைப்படம் (Rough Plan) வரைந்து கொள்ள வேண்டும். ஒரு பொறியியல் வல்லுநரைக் கொண்டு சரியான படம் வரையச் செய்து அதற்கு ஆகும் உத்தேசச் செலவுகள் பற்றியும் திட்டம் வகுத்துக்கொண்டு செயற்படவேண்டும். வீட்டில் படுக்கை அறைகள் வசதிப்பட்டால் அவற்றுடன் இணைந்த க ழி ப் ப ைற க ள், சமையல் அறிை , சமையல் சாமான்கள் சேமித்து வைக்கும் அறை, உண்ணும் அறை , முன் மண்டபம் (Hai) வரவேற்பு அறை, பூசை அறை முகப்பில் உட்காருவதற்கேற்ற இட வசதி இவையெல்லாம் கிடைப்படத்தில் விவரமாகக் குறிப்பிட்டிருத்தல் வேண்டும். கட்டடத்தின் அடிப்படை (Foundation) பலமாக இருக்கும் விவரமும் கிடைப்படத் தில் தெளிவாகக் காட்டப் பெற்றிருத்தல் வேண்டும். கட்டடத்திற்குத் தேவைப்படும் மணல், செங்கல், மரம், இரும்பு, பல்வேறு குழாய்கள், முதலியவற்றிற்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு அறை யிலும் மூடிய பரண்கள், கண்ணாடி முகப்புள்ள அலமாரி கள் இவை அவசியம் இருத்தல் வேண்டும். இப்படி ஒரு வீடு கட்டிய அநுபவம் 1980 ஆண்டு இறுதியில் தொடங்கி 1983 ஆகஸ்டு வரை வீடு கட்டியதால் ஏற்பட்டது. நூல் எழுதுவதில் இந்த அநுபவம் 1951 முதல் 1956 வரை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் ஒரிரு தமிழாசிரியர்க்கு தான் பள்ளியிறுதித் தேர்வு வரை படித்த ஆங்கில் அறிவு இருந்தது. அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்துதான்