பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 நினைவுக் குமிழிகள்-3 கிருஷ்ணநாயுடு அடிக்கடி சொல்லக் கேட்டதுண்டு. இதன் திருந்திய வெளியீடு (புதிய சேர்க்கைகளுடன்) பாட்டுத் திறன்' என்ற புதிய திருநாமத்துடன் ஸ்டார் பிரசுரம் வெளியிட்டுள்ளது (1988). நான் காரைக்குடி சென்ற பிறகு பலமுறை திரு. முத்துசிவன் பேச்சைக் கேட்டிருக்கின்றேன். எப்பொழுது பேசினாலும் கவிதை” என்ற அவர் நூலிலிருந்தே பேசுவது போலத் தோன்றும். அதே எடுத்துக்காட்டுகள்; அதே வாக்கியங்கள். தலையில் வழுக்கை; அதை மறைக்க காந்திக் குல்லாய். அவரைப் பார்க்கும் போது யாரும் வழுக்கை மண்டையைப் பார்க்க முடியாது. வசீகரமான தோற்றம். எல்லோரிடமும் இனிமையாகப் பழகுவார். அதிகமாகப் புகைப்பார். இஃது ஒன்றுதான்.அவரிடம் நான் கண்ட பெருங்குறை; இப்பழக்கம் அவருடைய உடல் நலத் தைப் பாதிக்கக்கூடுமோ என்று அடிக்கடி அஞ்சியதுண்டு. நான் காரைக்குடி சென்றபோது ஊருக்குள் குடியிருந்தவர் மறுஆண்டே கல்லூரி வளாகத்திலிருந்த பேராசிரியர் களின் குடியிருப்பில் ஓர் இல்லத்தில் குடியேறி விட்டார். கவிதையைப் பற்றி இவர் கூறி வரும் சில கருத்துக்கள் இவர்தம் உள்ளத்தைத் தெளிவாகக் காட்டும்; இவர்தம் ஆளுமையையும் புலப்படுத்தும். கவிதை கற்பனையோடு கலந்து வரும் என்ற கருத்தை இவ்வாறு கூறுவார்: இனி கற்பனையோடு கலந்து வரும் கவிதை ஒன்றைப் பார்ப் போம். தலைவனைக் காணாது தலைவி வருந்துகின்றாள். பகல் நேரத்தையாவது ஒரு வகையாகக் கழித்து விடலாம். ஆனால் இரவு நேரத்தைக் கழிக்கிறது என்பது தனிமையில் இருக்கிறவர்களுக்கு மிகவும் கஷ்டமான காரியம். தனிமையின் கொடுமை அப்பொழுதுதான் மிக அழுத்த மாக நெஞ்சைத் தாக்குகின்றது. தனிமைத் தீயில் அகப் பட்டு, பாவம், தலைவியினுடைய உள்ளம் வெந்து பொசுங்குகின்றது. ஆற்றும் ம்னவன்மை இல்லை. மனம்