பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 7& நினைவுக் குமிழிகள்-3 பாடு என்னவென்றால் சங்கீத வித்துவானுடைய இசைத் திறமையில் மனதைப் பறிக்கொடுத்துக் கீர்த்தனாசிரியனை மறப்பது போன்று கவிஞனுடைய கலைத் திறமையில் லயித்து அவனையே கருத மறக்கின்றோம். அத்தோடு நாமும் அவனுக்கு நிகர் என்று எண்ணியும் விடுகின்றோம். ஏனென்றால் அத்தனை கவர்ச்சி பிறக்கின்றது. முன்னிக் கவிதை வெறிமூண்டு தனவழிந்து விட்டால், அவனுடைய மேதையின் போக்கே தனி, வண்ணச் சிறகுதறும். மகத் தாகப் பறந்து வரும். விண்னகத்தே ஏறும். மண்நோக்கித் தாழும். தண்ணமுதப் பாட்டிசைக்கும். தாரகையின் ஊடு செல்லும் . காணாதன காட்டும். கருதாதன உணர்த்தும். கல்லைக் கனியாக்கும். கடு விஷத்தை அமுதாக்கும். கோடி வழங்குவிக்கும். கோபுரத்தைப் பொன் பூசும். அதன் சக்தியும் பெரிது. அதன் வளமும் பெரிது. எதனை யும் ஆழ உணரும், அகல விரிக்கும், அத்தகைய போக்கு அதன் போக்கு." மேலே ஒரு பலா மரத்தைக் குறிப்பிட்டோம். அதை ஒரு கவிஞன் பார்க்கும்போது அந்தப் பார்வையினுடைய விசேஷமே ஒரு புது மோஸ் தரைப் பெற்றதாக இருக் இன்றது. பலாவின் கோப்பெல்லாம் சதுர் வேதம். பிஞ்செல்லாம் சிவலிங்கம். கனியெல்லாம் சிவலிங்கம். களையெல்லாம் சிவலிங்கம். வித்தும் சிவலிங்க சொரூபந் தான். - (கேதார கெளளம் அல்லது பைரவி) இளைகளாய்க் கிளைத்தபல கோப்பெல்லாம் சதுர்வேதம்; கிளைகள் ஈன்ற களையெலாம் சிவலிங்கம்; கனியெலாம் சிவலிங்கம்; கனிகள் ஈன்ற