பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர் ஆ. முத்துசிவம் - I & I களால் விளக்குவார். 'கவிதை என்பது ஓர் அபூர்வ இன்ப சாதனம். அதற்கென்று அமைந்த தனிமுறையில் அஃது இன்பத்தைச் சுரந்து கொண்டே இருக்கும். அதுவே அதனுடைய இலட் சியம். அதனுடைய பிறப்பு-மர்மமும் அதுவே. அதைக் கட்டுப்படுத்த முடியாது. எத்தனை இலக்கணத்தை அதன் முன் தட்டிக்கொடுத்து தலை விரித் தாடச் சொன்னாலும் அந்தப் பேயாட்டத்திற்கெல்லாம் அது மயங்கிவிடாது' என்பார். கவிதையைப் பற்றி முத்தாய்ப்பாக... அந்த ஒன்றின் பெருமையோ எண்ணவும் அரிது, இயம்பவும் அரிது. நமது ஊனினை உருக்குகின்றது. உள்ளொளி பெருக்குகின்றது, உலப்பிலா ஆனந்தத் தேனினைச் சொரிகின்றது, அது எது? அது தான் கவிதை. அது அழகுடையது. எனவே ஆனந்தம் நிறைந்தது, அது ஜீவனுடையது. எனவே சிரஞ்சீவித்தும் பெற்றது. கவிதை, கொள்ளவும் இன்பம் கொடுக்கவும் இன்பம். பாடவும் இன்பம். பகரவும் இன்பம். வாடா நறுமலர். வற்றாப்பெருங்கனை. நாடாரை நாடாது. நட்டாரை நீங்காது. கல்லினும் இருக்கும். புல்லிலும் இருக்கும். காற்றிலும் இருக்கும். கனவிலும் இருக்கும். வாழ்க கவிதை . வாழ்க நிரந்தரம். வாழ்க அதன் புகழ். வாழ்ந்திடும் உலகு. நல்லது பிறக்கவும், நானிலம் சிறக்கவும், அல்லது நீங்கவும், அமைந்தது நிலவவும் . கவிதையைப் போன்று துணைசெய்யும் சாதனம் எதுவும் இல்லை. அது, உள்ளத்தைச் சுண்டி விடும் உணர்வுதனைக் கிண்டிவிடும்; கொள்ளை வளங்காட்டும் கோபுரம்போல் நலம் காட்டும்;