பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நினைவுக் குமிழிகள்-3 காணும் கண்வழங்கும் கருதும் மதி வழங்கும்: பேணும் அறம்வளர பெரிதாம் துணை வழங்கும். ஆம், அதற்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. இன்னும் சொல்வதென்றால் கவிதையானது, இருளை ஒட்டும் இரவி, எழிலை ஊட்டும் சுரபி: அருளை இறைக்கும் மேகம்; அகத்தை நிறைக்கும் போகம்: துன்பம் கொல்லும் சுடர்வேல்; இன்பம் நல்கும் ஏது; தோண்டத் தோண்டச் சுரக்கும்: சுவைக்கச் சுவைக்க இனிக்கும். அல்லாது போனால், போதெல்லாம் பாட்டு பொழுதெல்லாம் சங்கீதம்; யாதுக்கும் அஞ்சோம், அவனியெலாம் எம்உடைமை; சூதுக்கும் வஞ்சனைக்கும், சூழ்ச்சிக்கும் மாந்தர்செயும் வாதுக்கும் மாமருந்து யாம்புகலும் வண் கவிதை என்று நெஞ்சாரச் சொல்வாரா சீமான் ச. து. யோகியார் என்ற கவிஞர்?’ என்று கவிதை வேகத்தில் பேசுவார். ஆம், அவ்வாறுதான் பேசுவார். காரணம், அவரே ஒரு கவிஞர். 1955-என்று நினைக்கின்றேன். முதல்வர் துரைக் கண்ணு முதலியார் வந்து பதவியேற்று ஒன்றிரண்டு வாரங்கள்தாம் ஆயின. காலையிலேயே ஓர் அன்பர்,