பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரி வளாகத்தில் விழாக்கள் 芷母5 கட்குத் தொடக்கத்திலும் துன்பம் இல்லை; இடையிலும் துன்பம் இல்லை: இறுதியிலும் துன்பம் இல்லை. * இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை’ என்ற பெரும்பேறு அமையப்பெற்றவர்கள் படைப்பின் உட்கருத்தை அறிந்த வர்கள். தங்களுக்கென்று தேடுபவர்க்குச் செல்வம் சேர்ந்து பிறகு தங்களை விட்டுச் சென்று விடுகின்றது. ஒன்றையும் எதிர்பாராது கொடுத்துக் கொண்டே இருப்பவர்கட்குக் கொடைக்கு வேண்டிய பொருள் தானே வந்தமைகின்றது. அத்தகைய மனநிலை அட்சய பாத்திரமாகின்றது. ஆகையால் அதில் துன்பம் இல்லை. இதுதான் படைப்பின் மேலான திட்டம், அதுட்டித்துப் பார்ப்பவர்கட்கு இவ்வுண்மை விளங்கும். வள்ளல் அழகப்பர் வாழ்க்கையை வேள்வியாக நடத்தி வந்தவர். இதனால் அவரிடம் ஆக்கமே அதிகரித்து வந்தது. வேள்வி சிறப்பினும்; செல்வமும் ஈனும் முக்தி ஈறாக அனைத்தையும் ஈனும் . இதனை நன்கு அறிந்தவர் அழகப்பர். பகவத் கீதையின் தாத்பரியமும் இதுவே. மண்ணுலகிலும் விண்ணுலகிலும் உள்ள மேலோர் கள் தேவர் என்று வழங்கப்பெறுவர். இவர்கள் உயர் செயல்களிலே அதிகமாக ஈடுபடுவர். இவர்களது நற்செயல் களில் ஒத்துழைப்பது யாகமாகின்றது. கைம்மாறு கருதாது சான்றோர்க்குத் துணை புரிகின்ற அளவு சான்றோர். அவர்கட்கு நன்மையே செய்வார்கள். ஒரு மனிதன் உலகத்தவர்க்கென்றே உயிர் வாழ்ந்திருக்கும்போது .உலகம் முழுவதும் அவனது நன்மையில் கருத்துடையதா கின்றது. தெய்வத்தை யாண்டும் முழு மனத்துடன் ஆராதித்தால் அத்தெய்வத்தின் விபூதிகளெல்லாம் அம்மனிதனை வந்தடைகின்றன. பிறருக்கு மனிதன் எதை எடுத்து வழங்குகின்றானோ அதையே இயற்கையும் எடுத்துப் பன்மடங்கு அதிகமாக அவனுக்குவழங்குகின்றது. இப்படி ஒருவர்க்கொருவர் பேணுதல் என்ற யாகத்தால் எல்லோர்க்கும் நன்மை வந்தமைகின்றது.