பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 92 நினைவுக்குமிழிகள்-3 இந்தக் கடைத் தொடர்பு ஏற்பட்டது. இவருடன் தொடர்பு ஏற்பட்டபிறகு இவர் நகைத் தொழில் படுத்து விட்டது. என்பதாக நினைவு. பெயருக்கு ஏதோ நடத்தி வந்தார்; அவ்வளவே என்று நினைக்கின்றேன். இத்தொடர்புக்குப் பின் கடைத் தெருவிற்கு வரும்பொழுதெல்லாம் இந்தக் கடையில் சிறிது நேரம் உட்கார்ந்து MMR இடம் பேசிப் போவது வழக்க மாகி விட்டது. செட்டியாரிடம் உரையாடுவதே ஒரு தனிச்சுவை. காரைக்குடியில் முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சிகளை யெல்லாம் சுவையாக நினைவிற்குக் கொணர்வார் இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள். இப் போது இவர் இல்லை. ராய, சித (ராய. சொ. வின் இளவல்) சிவ. ராம தனுஷ்கோடி செட்டியாரிடம் அறிமுகம் செய்து வைத் தார். நிலம் விற்று வங்கியில் போட்டு வைத்திருந்த தொகைகளை எடுத்து இவரிடம் கோடுத்திருந்தேன் சொற்ப வட்டிக்கு. வங்கி வட்டியை விடச் சிறிது அதிகம்; அவ்வளவு தான். கொடுக்கல் வாங்கல் தொடர்பு ஏற்பட்ட பிறகு இவர் கடையும் சிறிது நேரம் உட்காருவ துண்டு. இவர் தொழிலில் ஊக்கமுடையவர். நகைக் கடையை மிகச்சிறப்பாக நடத்தி வந்தார். தங்கக் கட்டுப் பாடு ஏற்படுவதற்கு முன் கடைக்குப் பின்புறம் பத்துப் பன்னிரண்டு பொற்கொல்வர்கள் இவர் கடைக்குப் பல் வேறு நகைகளைச் செய்து வந்தனர். ஒரு வருடக் கடைக்குப்பையே பல்லாயிரத்திற்கு விற்கப்படும். அவ்: வளவு மும்முரமாகத் தொழில் நடைபெற்று வந்தது. பல்வேறு மூடப் பழக்கங்கள்: நகைக் கடை வணிகர் களிடம் பழகியதில் அப்பக்கத்துச் செல்வர்களிடம் பல்வேறு மூடப் பழக்கங்கள் நிலவிவருவதைக் கண்டேன். ஆண்களில் சிலர் நவரத்தின மோதிரங்களையும் பெண் களில் சியர் நவரத்தின டாலர்களையும் அணிந்து வருவது வழக்கமாக இருந்தது. நகைக்கடைக்கு நாட்டுப்புறத்துப்