பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகை வணிகர்களின் தொடர்பு 覆莎諡 பக்கத்திலிருந்து வந்திருந்த ஒருவர் நவரத்தினத்தாலான ஒரு பெரிய மோதிரம் போட்டுக் கொண்டிருந்தார். கடைக்கு வந்திருந்த சிலர் அந்த மோதிரத்தை வாங்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர்; சிலர் அதனை மதிப்பிடவும் தொடங்கினர். அதில் தங்கம் இரண்டு சவரன இருக்கும்; மீதி நவரத்தினங்கள். நவரத்தினங்களாவன; மாணிக்கம் (Ruby), L16167th (Coral), em sugrib (Diamond), logggih, Lužao (Emerald) sposiuth (Lapis latzuli), doša (Pearl), flaväägo (Sapphire), Gâr"Glossib (Sardonyx), புஷ்பராகம் (Topaz). இவை ஒன்பதும் ஒன்பது கோள் கட்கும் குறியீடுகள். ஒவ்வொரு கோளுக்கும் இது இது என்ற கணக்கும் உண்டு. மோதிரத்தில் இவை, கோள்கள் கோவிலில் அமைந்திருப்பதைப்போல் அமையுமாறு கட்டப்பெற்றிருக்கும். இத்ததைய மோதிரத்தைத் தரித்துக் கொண்டிருப்பவர்கட்கு கிரக தோஷம் இராது என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றது. இப்படியே நவரத்தின டாலர் தரித்துக் கொண்டிருக்கும் மகளிருக்கும் 'கிரக தோஷம்" இராது என்று நம்பு கின்றனர். மோதிரத்தின் விலையை மதிப்பிட்டவர்களில் ஒருவர் மோதிரத்துக்குரியவரிடம் எவ்வளவு விலைக்கு வாங்கி ரீைர்கள்?’ ’ என்று கேட்க அவர் ஐயாயிரத்திற்கு’’ என்று கூறினார். இன்னொருவர் மலிவாக வாங்கி விட்டீர்கள்’’ என்றார். எல்லோரும் சென்ற பிறகு செட்டியாரை அதன் விலை எவ்வளவு இருக்கும்?’’ என்று கேட்டேன். இரண்டாயிரத்திற்கு நல்ல மோதிரம் செய்யலாம். ஆனால், இதிலுள்ள நம்பிக்கையின் காரண மாக ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆயிரங்கள் வரை போகும்’ என்றார். விற்பவர்களின் நம்பிக்கை யூட்டும் பேச்சு சாதுர்யத்தாலும் வாங்குவோரின் செல்வச் செழிப்பு, அவர் அதன்மீது கொண்டுள்ள நம்பிக்கை இவற்றிற்கேற்பவும் அதன் விலை தீர்மானமாகும்.நான் சில நி-13 - -