பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந்கைவணிகர்களின் தொடர்பு 認95 திருப்பிப் பார்த்து விட்டு : சோமய்யா, பிள்ளையார் நன்றாகத்தான் உள்ளது. எனக்கு வள்ளல் அழகப்பர் மாதந் தோறும் ரூ. 250 = படி அளக்கின்றார். அதுவே எனக்குப் போதும். அதற்குமேல் யான் விரும்பினால் என் இதயகமலத்தில் நிலையாக வீற்றிருக்கும் பிள்ளையாரையே கேட்பேன். இந்தப் பிள்ளையார் உங்களிடமே இருக்கட்டும். இராசியான பிள்ளையார் என்கின்றீர்கள். உங்கட்கும் நிலைமை சரி இல்லை. இதனால் உங்கள் நிலைமை சரியாகட்டும்' என்று கூறித் திருப்பித் தந்தேன் பிள்ளையாரை. சோமய்யா உங்களை எளிதில் சரிப்படுத்த முடியாது. உங்களிடம் இத்தகைய மோகம் இல்லை. நீங்கள் எதையும் நம்பி ஏமாற மாட்டீர்கள்’’ என்று ஒரு போடு போட்டது இன்றும் என் நினைவில் பசுமையாக உள்ளது. M. S, இராசமாணிக்கம் செட்டியார் சொன்னது நினைவிற்கு வருகின்றது. காரைக்குடியில் எமகாதகத் தரகர் ஒருவர் உண்டு. அவர் உங்கள் சி.வி. சி.டி. வி.யையே மசிய வைத்து ஏமாற்றி விட்டார்’ என்றார். அவரே என்னிடம், M. S. R. பாருங்கள். இன்று ஒரு பெரிய நபரை ஓர் அமுக்கு அமுக்கி விடுகின்றேன்' என்று சொல்வி விட்டுக் கானாடுகாத்தான் (செட்டி நாட்டின் பெயர்) சென்றார். அவரிடம் 2; அங்குல நீளம் 1; அங்குல அகலம் ஒர் அங்குலகனம் உள்ள ஒரு பச்சைக்கல் இருந்தது. இதை அவர் சி.வி. சி.டி. வி.யின் தலையில் கட்டவே சென் றார். பொதுவாகத் தரகர்கள் சாதுர்யமாகப் பேசுபவர் கள். அவர்களுள்ளும் இந்தத் தரகர் எமகாதகர். இங்கிதம் அறிந்து செட்டியாரைப் பேட்டி கண்டு விட்டார். ஐயா, ஒரு பச்சை எனக்குக் கிடைத்தது. அதை வாங்கும் போதே உங்கள் நினைவுதான். உங்களிடம் அது இருந்தால் இராசி என்றுதான் கொண்டு வந்துள்ளேன்' என்று சொல்லிய வ்ண்ணம் பச்சை வண்ணத்தாளில் சுற்றி மேலும் ஒரு வெள்ளைத்தாளில் சுற்றி வைத்திருந்த