பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-13 ! 专辑 24. திரு. W. சொக்கலிங்கம் பிள்ளை திரு. W. சொக்கலிங்கம்பிள்ளை சைதையில் (1940-41) நான் பயின்றபோது வகுப்புத் தோழர் என்று முன்னொரு குமிழியில் குறிப்பிட்டேன். நகராண்மைப் பள்ளி தொடங்கின நாள் தொட்டு தற்காலிகத் தலைமை யாசிரியராக இருந்தவரை முதல் உதவியாசிரியராக்கி அவர் இடத்திற்கு விளம்பரம் செய்து ஆரோக்கியசாமி என்பவரை நியமனம் செய்தது நகராண்மைக்கழகம். ஐந்தாண்டுகள் பணியாற்றி திரு. ஆரோக்கியசாமி ஒய்வு பெற்றபிறகு திரு. சொக்கலிங்கம்பிள்ளை நிரந்தரத் தலைமையாசிரியரானார். தொடக்ககாலத்திலிருந்தே சொக்கலிங்கம்பிள்ளை ஏழைபங்காளராகத் திகழ்ந்தார். பி.டி. மாணாக்கர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் பொழுதெல்லாம் இவருடன் உரையாடித் திரும்புவதுண்டு. கணநாதன் என்ற மாணவன் சிறுவயதில் பர்மாவிலிருந்து நடையாக வந்தவன். மாமன் வீட்டில் வளர்ந்தவன். மாமன் ஆறுமுகம்பிள்ளை என்பவர் அழகப்பா பயிற்சிக் கல்லூரியில் உதவியாளராகப் பணியாற்றிவந்தார். இந்தச் சிறுவனை நகராண்மைப் பள்ளியில் சேர்ந்தார் ஆறுமுகம் பிள்ளை. சாதிச்சலுகை மூலம் சொக்கவிங்கம்பிள்ளை அவர்களின் உதவியால் அரைக்கட்டணச் சலுகை பெற முடிந்தது. அரைக்கட்டணத்தை நான் கட்டி உதவினேன். கணநாதனும் பள்ளியிறுதித்தேர்வில் வெற்றி பெற்றான். இஃது இவ்வாறு இருக்க, சொக்கலிங்கம்பிள்ளை தற்காலிகத் தலைமையாசிரியராக இருந்தபோது சிறப்புக் கட்டண நிதியிலிருந்து செவிப்புல்க்கட்புலக் கருவிகள் வாங்கப்பட்டன. அந்நிதியைப் பயன்படுத்தும் அதிகாரம் தலைமையாசிரிக்கு உண்டு. சொக்கலிங்கம்பிள்ளை அவற்றைத் தன் இச்சையாக வாங்கவில்லை. ஒரு குறிப்