பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.Y. சொக்கலிங்கம்பிள்ளை 239, றேன். கல்லூரி இல்லத்தில் (College House) தங்கினோம். இன்றிருப்பதுபோல் அஃது அன்றில்லை. முன்பக்கம் சிறிய அறைகள் இருந்தன. பின்பக்கம் காலியிடம்; அதனை யடுத்து ஒரு சிறு உணவு விடுதி, தங்கும் அறைக்கு இரு வருக்கும் மூன்று ரூபாய் வாங்கினதாக நினைவு. அப்போது இட்டலி விலை மூன்று காசு தோசை ஆறுகாசு; காஃபி ஒன்பது காசு என்பதாக நினைவு. அதிகாலையில் எழுந்து நீராடி மீனாட்சி-சொக்கலிங்கப் பெருமானைச் சேவித் தோம். வந்த காரியம் வெற்றியடைய வேண்டும் என்று அம்மையப்பரை வேண்டிக் கொண்டோம். தரிசனம் முடிந்து ஏழரை மணிக்கு திருக்கோவிலைவிட்டு வெளி வந்தோம். அறைக்கு வந்து உட்புறமாக இருக்கும் உணவுவிடுதியில் சிற்றுண்டி கொண்டோம். எல்லாம் சாவகாசமாக நடைபெற்றன, அறைக்கு வரும்போது மணி ஒன்பது. மதுரைமாவட்டக் கல்வி அதிகாரியின் அலுவலகம் நகரப் பேருந்து நிலையத்திற்கு எதிரில் உட்புறமாக இருந்தது. காவலாளியை விசாரித்து அதிகாரி ஊரிவிருப் பதை அறிந்து கொண்டோம். இரண்டு சாத்துகுடி வாங்கிக் கையில் வைத்துக்கொண்டோம். சற்றேறக் குறைய பத்தரை மணிக்குத் திரு பத்தர் அலுவலகத்தில் துழைவதைப் பார்த்தோம், பதினைந்து மணித் துளிகள் கழிந்த பிறகு இருவரும் பெயர்களை ஒரு தாளில் எழுதி உள்ளே அனுப்பினோம். அதிகாரி வருமாறு பணிக்கவே, இருவரும் அறையில் நுழைந்து வணக்கம் தெரிவித்தோம். சுமார் ஏழு ஆண்டுகளாக திரு. பத்தரைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு இல்லாததால் மிக அன்புடன் உரை யாடினோம். நான் துறையூரிலிருந்து காரைக்குடி வந்த போதும் அதற்கு இரண்டு மூன்று ஆண்டுகட்கு முன்னரே யும் திரு. பத்தர் தஞ்சைக்குப் போய் விட்டதால் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. நான் கல்லூரியில் பணியாற்றுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார் பத்தர், நி-14 - . -