பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஏழைக்கு உதவியது - 229 வித்தது. அந்த இறைவனை இன்றளவும் மனமார வாழ்த்தி வணங்குகின்றேன். - 1953-54 இல் கல்லூரிப் பணியில் சேர்ந்த நாள் தொட்டு மிக நன்றாகப் பணியாற்றி நற்பெயர் எடுத்தான் கணநாதன். ஊரிலும் நல்ல பெயர் வாங்கினான். காரைக்குடியில் புதிதாகத் தோற்றுவித்த துளுவ வேளாளர் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றி னான். சங்கத்தின் தலைவர் தங்கபஸ்பம் ஆறுமுகம்பிள்ளை யின் மகன் திரு R. மாரிமுத்து என்பவர் கனநாதனுக்கு ஆறு ஏழு பிள்ளைகள். ஒரு பெண்ணை சென்னையில் ஒரு நல்ல இடத்தில் வாழ்க்கைப் படுத்தினான். நான்கூட கே. கே. நகரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன் (மூன்று ஆண்டுகட்கு முன்). கணநாதன் இப்போது இல்லை. 1985-ஆம் ஆண்டின் இறுதியில் குருதிப் புற்று நோயால் தாக்கப் பெற்று, சுமார் 30 ஆண்டுகட்கு மேல் நற்பணியாற்றி, நற்பெயர் எடுத்து, இறைவன் திருவடி நிழலை அடைந்த செய்தியை மே மாதம் நான் புதுச்சேரிக்குச் சென்றிருந்தபோது கேள்வி யுற்றேன். காரைக்குடி நண்பர் திரு. பூ. அமிர்தலிங்கத்தின் திருவளர் செல்வன் டாக்டர் அறிவு நம்பிதான் இச் செய்தியைச் சொன்னார், புதுச்சேரிக் கம்பன் கழகச் செயலர் திரு. அ. அருண்கிரி இல்லத்தில். காரைக்குடி யிலிருந்து தகவல் இல்லை. ஆறுமுகத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கடிதம் மே மாதம் எழுதியும் இதுகாறும் (செப்டம்பர்-89) மறுமொழி இல்லை. இருப்பூர்தி நிலையத்திற்கு அருகிலுள்ள சிற்றுண்டி விடுதியில் பணியாற்றும் பையனுக்குக் கிடைப்பதாக இருந்த வேலை கல்லூரியில் பணியாற்றும் ஆறுமுகம் பிள்ளையின் மைத்துனனுக்குக் கிடைக்குமாறு தாங்கள் முயன்ற முறை சரிதானா? இப்படி ஓர் அன்பர் வினவு கின்றார். இதற்கு என் மனச்சான்று விடை அளிக்கின்றது.