பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗3纷 நினைவுக் குமிழிகள்-3 (1) முதல்வர் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்ற பையனே வேண்டர் எட்டாவது வரை படித்த பையனே போதும் என்று அறிவியல் பேராசிரியரைப் பரிந் துரைக்குமாறு கேட்டது. நியாயந்தானா? ஒரு பிராமணி சல்லதே. பையன் இப்பதவிக்கு மனுப் போட்டிருந்தால் இப்படிப் பரிந்துரைக்குமாறு கூறுவாரா?-இவற்றிற்கு விடை தேடுங்கள். (2) எட்டாவது வரை படித்த பையனாக இராமல் 11-வது தேர்ச்சி பெற்ற ஒரு பிராமணப் பையனாக இருப்பின் அவனை வேண்டா என்று சொல்லி எட்டாவது: வரை படித்த பையனைத் தேடுவாரா முதல்வர்?-- இதற்கும் விடை தேடுங்கள். (3) சிற்றுண்டிசாலைப் பையன் முயலாததற்கு. முன்பே கணநாதனுக்காக ஆறுமுகம் முதல்வரிடம் கேட்டி ருந்தால் நிச்சயம் கண நாதனுக்கு அந்த வேலை கிட்டும். முதல்வர் மிகவும் நல்லவர். சாதி வேறுபாடு பாராமல் அவனை நியமனம் செய்திருப்பார் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அறிவியல் பேராசிரியர் அய்யாதுரை ஜேசுதாசனே எட்டாவது வரை படித்த பையன் பொருத்தமற்றவன் என்று நினைத்ததால் முதல்வர் பரிந்துரைக்குமாறு கேட்டதால் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடிப்போனார். இதனால் அவர் மனம் வருந்தியதை நான் அறிவேன். நிற்க, எனக்கு சாதிப்பற்றும் இல்லை, சாதி வெறியும். இல்லை என்பதை என்னுடன் பழகியவர்கள் அனைவரும் நன்கு அறிவர். கணநாதன் என் சாதியைச் சேர்ந்தவனும் அல்லன் . (1) நான் உதவி செய்த பையன் பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெற்றவன். அகதிபோல் பர்மா