பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒர் ஏழைக்கு உதவியது 23 # விலிருந்து நடையாக வந்தவன். அவனுக்குத் தாயும் இல்லை. தந்தையும் இல்லை. மாமன் அரவணைப்பில் இருப்பவன். (2) கனநாதன் ஆய்வக உதவியாளுக்குரிய தகுதி யுள்ளவன் என்பதை என் மனச்சான்று உணர்த்தியது. அறிவியல் பேராசிரியரும் இக்கருத்தினராகவே இருந்தார். இதனால் அவனுக்காக முயன்றது தவறல்ல என்பதை என் மனச்சான்று அரணாக அமைகின்றது. (3) சற்று முன்னர் ஆறுமுகம் முயன்றிருந்தால் முதல்வர் கணநாதனை நியமனம் செய்வதில் தடையாக இரார் என்பதை நான் நன்கு அறிவேன். சந்தர்ப்பச் சூழ் நிலையாலும், ஏழைப் பையன் என்பதாலும் அவர் மனம் இரங்கி இப்படிச் செயற்பட்டார் என்று கொள்ளலே பொருந்தும். அவர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு மாசு கற்பிப்பது அநியாயம். - சா. க.வை நன்கு அறிந்தவனாதலால் நான் அவரைச் சம்பந்தப்படுத்த விரும்பவில்லை. அவர் மதில் மேல் பூனை யாகி விட்டால் என்று அஞ்சியதால் வேறு முறையைக் கையாள யோசனை கூறினேன். இதனால் இருப்பூர்தி நிலையச் சிற்றுண்டி விடுதிப் பையனுக்கு நான் மனத் தாலும் தீங்கு செய்ய நினைக்கவில்லை. தகுதி இல்லாத வனுக்குத் தகாத முறையில் கிடைக்கும் படியான வேலை தகுதியுள்ளவனுக்குப் போய்ச் சேர்ந்தது என்பதை இறைவனது திருவுள்ளக் குறிப்பாகக் கொண்டால் என் மீதும் மாசு இல்லை என்பது தெளிவாகும்.