பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமிழி-135 29. தமிழ்க்கடல் ராய.சொ. மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்குச் சொக்கலிங்கப் பெருமான் தலைவராக இருந்ததுபோல் காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்திற்கு ராய. சொக்கலிங்கம் தலைவ ராக இருந்து வந்தார்கள், துணைவியார் சிவப்பேறு அடைந்த பிறகு ராய. சொ, இ. ம. சங்கத்திலேயே நிலையாகத் தங்கியிருந்தார்கள். இந்தக் காலத்தில் அவர் வாழ்க்கையில் நேரிட்ட சில நிகழ்ச்சிகள் இக்குமிழி யில் எழுகின்றன. (1) சங்கத்தின் ஆட்சிக் குழுவில் ராய. சொ. விற்கு தமிழ்க்கடல்' என்ற விருது அளிக்க வேண்டும் என ஒருமன தாக முடிவு செய்யப்பட்டது. அதே சமயத்தில் அவருடைய மணி விழாவையும் கொண்டாடவேண்டும் என்றும் முடிவு செய்தது. பெரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. மீனாட்சிசுந்தரேசுவரர் மகளிர் பள்ளியில் இந்த விழாக்கள் நடை பெற்றன. ஒருநாள் அவருடன் உரையாடிக்கொண்டிருந்த பொழுது தமிழ்க்கடல்' என்ற விருது முதன் முதலாகத் தமிழகத்தில் தமக்குத்தான் வழங்கப்பட்டது என்ற கருத் தைத்தெரிவித்தார். இல்லையே. ஏற்கெனவே இந்தவிருது மறைமலையடிகட்கும் வழங்கப்பெற்றுள்ளது' என்றேன்’ ஞானசாகரம் என்ற திங்கள் இதழ் மறைமலையடிகளால் நடத்தப் பெற்று வந்தது. இதுவே பிற்காலத்தில் அடிளால் பெயர் மாற்றப்பெற்று அறிவுக்கடல் என்ற பெயரில் வெளி வந்தது வேதாசலம்’ என்ற தம் திருநாமத்தையும் மறை மலைஅடிகள் என்று தமிழாக்கிக் கொண்டார்கள். இதன் ப்ழைய தொகுதிகள் கட்டமைக்கப்பெற்று இ.ம.ச.நூலகத்.