பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்கடல் ராய. சொ. 認37 களில் முறையே நடைபெற்றன. அப்பர் சுவாமி கட்குத் திருவடி சூட்டியருளிய திருநல்லூரிலும், சம்பந்த ருக்குத் திருப்பிரமபுரத்தும், மணிவாசகப்பெருமானுத்குத் திருப்பெருந்துறையிலும், கண்ணப்பருக்குத் திருக்காளத்தி யிலும் சிவபெருமானே முன்னின்று தீக்கை செய்தருளினார் என்பது வரலாறு. திருமுறை அன்பும் சிவனெறிப் பண்பும் நல்லொழுக்க மும் வாய்ந்தவராய்க் காலத்தானும் சீலத்தானும் முதிய வரய் உள்ள ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் இச்சிவதீக்கை செய்து வைக்கும் தன்மை யராவர். பிள்ளையார், நெல் நிறைநாழி, நீர்க்கலயம், திரு விளக்கு ஆகிய நான்கு திருவுருவங்களை முறையே வழி பட்டும் வழிபடச் செய்தும் தீக்கை செய்து வைத்தல் வேண்டும் என்பவை செய்முறையாகும். சிவதீக்கைப் பேருடையாரே சிவலிங்கம் முதலிய திருவுருவங்களைப் பூசையிடத்து அமைத்து வழிபடுவதற்கும் அதனால் பெரும் பயன் எய்துவதற்கும் உரியவராவர். தீக்கை பெற்றது முதல் ராய. சொ. திருநீறணிந்து சிவப்பழம்போல் பொலிவதைக் காணும்போது சிவபெருமானைக் காண்பது போலவே இருக்கும். இவ்விடத்தில் வில்லிபாரத்திற்கு விளக்கம் நல்கிய ராய.சொ. சொன்ன பாடல் ஒன்று குமிழியிடுகின்றது. ஆசினான் மறைப்படியும் எண்ணில் கோடி ஆகமத்தின் படியும்எழுத்து ஐந்தும் கூறிப் பூசினான் வடிவமெலாம் விபூதி யால் அப் பூதியினைப் புரிந்த சடைப் புறத்தே சேர்த்தான் தேசினால்அப்பொருப்பின் சிகர மேவும் சிவன் இவனே போலும்எனத் தேவ ரெல்லாம் பேசினார் பெருஞ்சிலைக்கை விசயன் பூண்ட பெருந்தவத்தின் நிலைசிலர்க்குப் பேசலாமோ...?" 1. வி. பா. அருச்சுனன் தவநிலை-37.