பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 & நினைவுக் குமிழிகள்-3 பிரகலாதனைக் கொண்டு அழியச் செய்தாய், வீடணனைப் பகை ஆக்கி இராவணனைப் பொன்று வித்தாய், நாடுமுழுதும் அறியுமாறு எமக்குத் தலை வனாகிய கன்னனையும் நரன்கை அம்பால் நாசமாகச் செய்தாய். தேவர்களின் விரகினை யார் அறிய முடியும்’ ’ என்று தமக்கே உரிய அழுத்தமான குரலில் விளக்கம் தருவார். அன்று கூடியிருப்போர் இத்துடன் கலைந்து போவர். குமிழி-13 R 32. தருமன் உண்மையில் தருமனே சேய பங்கயச் சிறுவிரல் அங்கையில் திரட்டிய நறுவெண்ணெய் ஆயர் மங்கையர் இட இட, அமுதுசெய்து ஆடிய திருக்கூத்தும், தேய மும்குறு முறுவலும் புரிந்துபார்த் தருளிய நெடுகண்ணும் மாய வன்திரு வடிவமும் . அழகும்,என் மனத்தைவிட் டகலாவே' , ' என்று கண்ணனைத் துதித்த வண்ணம் இக்குமிழி வெளி வருகின்றது. இந்து மதாபிமான சங்கத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் விளக்கத்தில் ஒருநாள் நடைபெற்ற நிகழ்ச்சி இது. இந்தப்பாடலைத் திருநாவுக்கரசு செட் டியார் இசையுடன் படித்ததும், ராய. சொ. உட்பட அனைவரும் கண்ணன் வாழ்ந்த காலத்திற்குச் சென்று 1. வி. பா : நச்சுப்பொய்கை - காப்பு