பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தருமன் உண்மையில் தருமனே 罗密莎 த.தே : கற்பது எது? தரு : கசடறக் கற்பதே கல்வி. த.தே அனைத்தினும் அற்பம் ஆவது எது? தரு : அயல்கரத்து ஏற்றல். இங்கனம் அறக்கடவுள் வினாக்கட்கு அற்புதமாக விடை தருகின்றான் தருமன். உடனே அறக்கடவுள் அவன் கண்களுக்கு இலக்கு ஆகி பொன்மலை என்றல் போல் அவனை அடைந்து மெய்தழுவி வெய்யவனிடம் செய்த மாரண வேள்வியாகிய உபாயத்தை விளக்கினன். இதுகாறும் தன்னை வினவியவர் அறப் பெருங்கடவுள் என்பதை அறிந்து தாதையின் சேவடி தன் முடி சேர்த்து வணங்கினன். அறக்கடவுள் மிகவும் மகிழ்ந்து நின் தம்பியர் இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு என்று கூறி * நீ விரும்பும் ஒருவனை எழுப்பிக் கொள்ளலாம் என்று மந்திரம் ஒன்றை இயம்புகின்றான். தருமனும் தாதை கூறிய மறையைக் கொண்டே சகாதேவன் என்ற இளைய தம்பியை எழுப்புகின்றான். இந்த நிகழ்ச்சியில் உள்ளத்தைப்பறிகொடுத்த கவிஞரும் தருமனை வேதமும் நிகர் இலா விரத வாய்மையான்' என்று போற்று கின்றார். அறக் கடவுள் வாயு புத்திரனாகிய திண்திறல் வீமனையும், வில்வலான் விசயனையும் தவிர்த்து சகாதேவனை அழைத்ததன் காரணம் என்ன?’ என்று வினவ, விடையாக, வஞ்சனை இல்லாத குந்திக்கு யான் ஒரு மகன் இருப்பதைப் புரிந்து கொண்டாய்; என் சிற்றன்னை ம்ாத்திரிக்கு ஒரு மகன் வேண்டுமல்லவா? அதனால்தான் சகாதேவனை எழுப்பினேன்.’’ என்கின் றான். அறக் கடவுள் வைத்த சோதனையில் தருமன் தேறி விடுகின்றான்; அகமகிழ்கின்றான். நாமும் தருமன் உண்மையில் தருமனே!' என்று உள்ளம் பூரிக்கின்றோம். பின்னர் அறக்கடவுள் மைந்தனுக்கு அமர் வென்றிடுமறை 9-@E@6,