பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ 287 கவிதைகளைத் திறனாய்ந்தவர்கள் வயதிற்கேற்றவாறு வருணனை, உணர்ச்சி. கருத்து முதிர்ச்சி, வாழ்க்கையில் அவர்கள் கண்ட நோக்கம் முதலியவை வேறுபடுகின்றன என்று கூறியுள்ளனர். ஆனால் நான் எழுதிய இந்த நூலில் உள்ள கருத்துகள் பெரும்பாலும் முறைவல்லார்கள் எழுதியுள்ள ஆங்கில நூல்கள், கல்வி உளவியலிலுள்ள கருத்துகள், என் அநுபவங்கள் இவைதாம் தமிழ் வடிவம் பெறுகின்றன. இவற்றை யார் எழுதினாலும் எழுது வோரின் அநுபவங்களைத் தவிர ஏனைய கருத்துகள் மாறாதவை. பழக்கத்திற்குத் தகுந்தாற்போல் நடை யிலும் வேறுபாடுகள் தென்படும். தாங்கள் சொல்வதைப் பின்பற்றினால் நூல் எப்பொழுதுமே வெளிவராது. இப்போது வெளி வந்திருக்கும் நூல் இரண்டாவது பதிப்பின்போது கலைச் சொற்களிலும் மொழி நடையிலும் மாறலாம். தாங்கள் கூறும் யோசனை கவைக்குதவாதது, நடைமுறைக்கு ஒவ்வாதது. இப்படிச் சொல்வதற்கு மன்னித்தருள்க’’ என்று சொல்லி முடித்தேன். உடனே தெ.பொ.மீ. ரெட்டியார் உங்கள் துணிவையும் சிந்தனையையும் போற்றுகின்றேன். பெரும் பாலும் என்னைத் தமிழாசிரியர்களும் பிற ஆசிரியர்களும் சூழ்ந்து கொண்டே இருப்பர். நான் எதைச் சொன் னாலும் "ஆமாம் சாமி போடுவர். நானும் நான் சொல்வதெல்லாம் சரி என்றே நினைத்துக் கொள்வேன். சுற்றியிருப்பவர்களின் முகஸ்துதி ஒருவித போதையைத் தந்து என் சுய சிந்தனையைக் கெடுத்துவிடும். இம் முறையையே இன்றும் உங்களிடம் கூறினேன். நீங்கள் சுய சிந்தனையுடன் உங்கள் கண்ணையும் திறந்து காட்டி னிர்கள்; என் சிந்தனையையும் கிளறி விட்டீர்கள்: நீங்கள் சொல்வதுதான் சரி, அப்படியே செய்யுங்கள். நிறைய எழுதுங்கள். உங்கள் எழுத்துப் பணி சிறக்கட்டும்' என்று வாழ்த்தினார். கூடியிருந்த ஆசிரியர்கள் வாய் மூடி மெளனிகளாயினர்.