பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனாட்சி சுந்தரம் 29.3 பிறகு பாடலை அரை அரை அடியாகப் பாடி மாணாக்கர்களைக் குழுவாகத் தம்மைத் தொடர்ந்து பாடு மாறு செய்தார். பின்னர் பரவலாக ஒருசில மாணக்கர் களைத் தனித்தனியாகவும் பாடச்செய்தார். இதனால் பாட வளர்ச்சியில் மாணக்கர்களின் பங்கு எவ்வளவு என்பதை அறுதியிட்டுக் காட்டினார். தொடர்ந்து, குறத்தியின் இயற்கையோடொட்டிய வாழ்வு ஓவியம்போல் பாடவில் தீட்டப் பெற்றிருப்பதை மாணாக்கர்கள் உணர்ந்து அநுபவிக்குமாறு விளக்கமும் தந்தார். விருந்தோம்பிய பிறகுதான் குறத்தி உறங்கச் செல்கின்றாள் என்பதை உள்ளத்தில் நன்கு பதியச் செய் தார். தமிழகத்தின் தலையாய பண்பு குறமகளிடம் காணப்பெறும் சிறப்பைப் பாராட்டிப் பேசினார். படிப் பறிவு இல்லாத குறத்தியாயினும் அவள் உண்டு உயிர்த்து உறங்குவது, இனம் பெருக்குவது வாழ்வென்று அமையாது கயற்கண்ணியம்மையைத் தொழுது வாழும் இறையன் பினை மேற்கொண்டமையையும் பாராட்டிப் பேசினார். பாட முடிவாக, மீண்டும் பாடலை இசையுடன் பாடி அடியிற் கண்ட வினாக்களை விடுத்துப் பாடத்தைத் தலைக் கட்டினார். 1, குறமகளின் தொழில்கள் யாவை? 2. அவர்கள் பருகும் பானங்களைக் கூறு 3 . அவர்கள் எவற்றை உடுப்பர்? 4. அவர்கள் எவ்வாறு விருந்தோம் புவர்: 5. அவர்கள் எதன் மீது உறங்குவர்? 6. அவர் களுடைய இறை வழிபாடு எவ்வாறு கூறப் பெற்றுள்ளது? (l சாதாரண்மாகத் தமிழாசிரியர்களில் பெரும்பாலோர் கரும்பலகையைப் பயன் படுத்துவதில்லை. இலக்கணப் பாடத்திலும் கூட வாய்ப்பந்தல் போட்டே காலத்தைப் போக்கி ನಿ@t) னாட்சி சுந்தரம் பாடத் தொடக்கத்தில் கரும்பலகையில் மீனாட்சியம்மை குறம் என்று எழுதி னார். பாடத்தின் இறுதியில் தாம் விடுத்த வினாக்கட்கு.