பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடிமைப் பயிற்சி முகாம்கள் 岛盟?” படுத்தும் முறை, காலையில் பெறும் உடற்பயிற்சி, ஆற்றில் நீராடும் முறைகள், எல்லா இடங்களிலும் எல்லாச் செயல்: களிலும் ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்தல் போன்ற வற்றை அறியவும்; படுகையில் வகுப்பறை, இருக்கை வசதிகள் அமைப்பு, ஆசிரியர்கள் அமைதியாகக் கற்பிக்கும் முறைகள் இவற்றைக் கவனிக்கவும் வாய்ப்புகள் கிடைத்தன. இத்தனைக்கும் மேலாக அடிகளார் சில நாள் தங்கட்குக் கற்பித்தலால் தாம் பெற்ற பேறு கிடைத்தற். கரியது என்பதை உணர வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு துறவி சமூகத் தொண்டில் ஈடுபாட்டுடன் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட முறை அனைவர் கவனத்தையும் கருத்தையும் ஈர்த்திருக்க வேண்டும். ஒரு சில ஆசிரியர்களையாவது இத்தகைய குறிக்கோள்களைத் தம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தூண்டியிருக்கவேண்டும். இந்த முகாம் நடைபெறும் நாட்களில் வள்ளல் அவர்கள் திருச்சியில் இருக்கும் சந்தர்ப்பம் இருந்தது. இது தெரிந்து முகாமிற்கு வருகை புரியுமாறு எழுதியிருந்தார் முதல்வர். வள்ளலும் வருகை தர ஒப்புக் கொண்டிருந்: தார். அந்தக் குறிப்பிட்ட நாளில் அவரை இட்டு வர நான் அதிகாலையில் திருச்சி சென்றேன். வள்ளல் திருச்சி இருப்பூர்தி நிலையத்திலுள்ள அறையொன்றில் தங்கியிருந்: தார். வள்ளல் வருகையையொட்டி அவருக்காகச் சிறப் பான முறையில் சிற்றுண்டி தயாரிக்கப் பெற்றிருந்தது. சிற்றுண்டிக்குப் பிறகு மாணவர்கட்கு அறிவுரை வழங்க வும், பகலுணவு எல்லோருடனும் கலந்து உண்ணும் வாய்ப்பு தருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப் பெற்றிருந்: தன. ஆனால் ஏதோ எதிர்பாராத நிகழ்ச்சியால் தம்மால் வர முடியாத நிலையை வருத்தத்துடன் தெரிவித்தார். நான் ஏமாற்றத்துடன் வாளா திரும்பினேன். என் ஏமாற்றம் தொற்று போல் அனைவரையும் பற்ற,