பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

等雷醇 శ్రీకుభాష్మత శ్రీడిఫ్రిక్షి 4 விரிவுரையாளர் ஊதியத்திட்டம் 159-15.396, இதில் நான் ரூ 246| அடிப்படைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தேன். பேராசிரியர் ஊதியத்திட்டம் 250-504 என்பது. பதவி உயர்வு அளித்தால் நிர்வாகத்தின் முதல்ாண்டுப் பொறுப்பு ரூ 120/-. இது வள்ளல் அழகப்பர் நிர்வாகத்திற்குக் கணக்கிற்கு எடுத்துக் கொள்ள முடியாத மிகச் சிறிய தொகை. இவற்றையெல்லாம் விவரமாகக் காட்டி மீண்டும் ஒரு கடிதம் அனுப்பினேன். கிடைக்கும் போல் இருந்து. இந்நிலையில் புதுக் கரடி அவதூறு செய்தியாக விடப்பட்டது. இது மீண்டும் சில மாதங்கள் நடவடிக்கையை நிறுத்தி வைத்தது. இஃது இரண்டாவது பெரியதடையாக நின்றது. இச்செய்தியை நினைக்கும். போதே மனம் கூசுகின்றது: கை எழுத மறுக்கின்றது. இதைக் கிளப்பி விட்ட புண்ணியாத்மாக்கள் எப்படி தான் திட்டம் போட்டார்களோ என்பது அந்த விநாயகம் பெருமானுக்கே வெளிச்சம். ஒருநாள் T.V.S மணியன் சா.கவிடம் வந்தார். இந்த அவதூறு செய்தி'யைஅவரிடம் சொல்லி, பாருங்கள். இந்த அவதுாறு செய்தியை ரெட்டியார் சொன்னாராம். கல்லூரிகளை நிறுவியவரின் பெயரை இப்படிக் கறைப் படித்தலாமா? என்றார். அதற்கு சா.க. ரெட்டியார் அப்படிப்பட்ட ஆள் அல்லவே, அவர் அப்படிச் சொல்லி யிருக்கமாட்டார். அவருக்காக நான் சத்தியம் வேண்டு மானாலும் செய்து தருவேன். அவருடைய பதவி உயர்வைக் கெடுப்பதற்காகத்தோழஆசிரியர்களில் யாரோ ஒருவர் இத்தகைய பூதிச் செய்தியைக் கிளப்பி விட்டிருக் கின்றார். அதனை நீ உண்மை என நம்பி வீண் தொல்லைக் குள்ளாகின்றாய். ரெட்டியார் அடிக்கடி வந்து தலை காட்டுவார். இரண்டு வாரமாக வரவில்லை. ஏதாவது எழுத்து வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றார் போலும. அவர் இங்கு வரும் புோது.இதைச் சொல்லி விசாரிக்கின்றேன். நீ இதைக் க்ருத்தில் கொள்ளாதே."