பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லூரியில் பணிஏற்றல் 贾蕊 திருச்சி இருப்பூர்தி சக்திப்பை அடைந்தேன். எங்களை விட்டுப் பிரியும்போது பேருந்தை ஒட்டிவந்த மணவாளனும் கண் கலங்கியதைக் காணமுடிந்தது. இருப்பூர்தி வண்டி பகல் 1. 15 க்குப் புறப்பட்டது. நாலரை மணிக்குக் காரைக் குடி வந்து சேர்ந்தோம். குதிரைவண்டி அமர்த்திக்கொண்டு சுமார் ஐந்தரை மணிக்குக் காரைக்குடியில் புது வீடு புகுந்தோம். இந்த விட்டிலேயே பதினாறு ஆண்டுகள் வாழ்ந்தோம், பத்து ஆண்டுகள் நான் இருந்தேன்; பதினாறு ஆண்டுகள் குடும்பம் இருந்தது, ஆறு ஆண்டுகள் திருப்பதியில் தனியாக இருந்தேன்; விடுமுறைக் காலங் களில் காரைக்குடியில் தங்கியிருந்தேன். சதா என் வாழ்வில் தோன்றாத் துணையாக இருந்த இறைவனின் கருணையை எண்ணிப் பார்க்காத நேரமே இல்லை. குமிழி-109 2. காரைக்குடி நண்பர்கள் கிங்கள் வந்த அன்றே இரவு எட்டு மணிக்கு லாரியும் வந்து சேர்ந்தது. சாமான்களை இறக்கிக் கொண்டு வாடகை கொடுத்து லாரியை அனுப்பி விட்டேன். முத்துசாமி வந்ததால் சாமான்களையெல்லாம் அத்தத்த, இடங்களில் பொருத்தமாக வைப்பதற்கு வசதியாக இருந்தது. என் வாழ்நாளில் முத்துசாமியைப் போன்ற ஒரு திறமையான வேலையாளைப் பார்த்ததே இல்லை. இவன் திறமையைக் கண்டு நான் வந்த ஒன்றிரண்டு ஆண்டு களில் என் அருமை நண்பர் திரு K. S. முத்துவேல் பிள்ளை (Agent, Ceylon Labour Commission) 56irgo; ot-up அலுவலகத்தில் உதவியாளாக அமர்த்திக் கொண்டார்.