பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நினைவுக் குமிழிகள்-3 ரூ. 25|- மாதச் சம்பளம் வாங்கினவனுக்கு ரூ 200;. சம்பளமாகவும் வெளியூர் சென்றால் படியும் (நாளொன் றுக்கு ரூ 5/-) கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன். முத்துசாமி எட்டாம் வகுப்பு வரை படித்தவன்; இயற்கை யிலேயே எல்லாத் திறமைகளும் அவனிடம் அமைந் திருந்தன, வெட்டிக் கொண்டு வா’ என்றால் கட்டிக் கொண்டு வந்து விடுவான். இவனது செயலைப் பார்க்கும் போதெல்லாம் பாரதியாரின் கண்ணன் -என் சேவகன்" நினைவுக்கு வருவான். கொத்தடிமைபோல் தகப்பனும் மகனும் ஜமீந்தாரிடம் பணி புரிந்தவர்களில் தந்தை பொன்னம்பலம் வயதினால் ஒய்வு பெற்றார்; மகனுக்கு திரு. முத்துவேல்பிள்ளை மூலம் விடுதலை கிடைத்தது. சாமான்களை வைக்க வேண்டிய இடங்களில் வைப்ப தற்கே இரண்டு மணிநேரம் ஆயிற்று. வீட்டிலேயே உணவு கொள்ளச் செய்தேன். மறுநாள் காலை அதிகாலையி லேயே மீண்டும் சாமான்களை ஒழுங்குபடுத்தினோம். விறகு வைப்பதற்குப் புழைக்கடையில் நல்ல இடம் இருந்தது; மழையிலும் விறகு நனையாத அமைப்பு இருந்தது. காலையில் சிற்றுண்டி காஃபி அருந்தச்செய்து வழிச் செலவுக்கும் அன்பளிப்புக்குமாக ரூ. 25. கொடுத்து ஒப்பியதாக நினைவு. தொகையை வாங்க மறுத்தான். வற்புறுத்தி வாங்கிக் கொள்ளச்செய்தேன். அவன் சாமான் களைப் பாதுகாப்புடன் கொண்டுவந்து சேர்த்ததற்கும் ஒன்பதாண்டுக்காலம் இட்ட வேலைகளையெல்லாம் முக மலர்ச்சியுடன் செய்தமைக்கும் இந்தத் தொகை போதாது; ஆனால் இத்துடன் கலந்த அன்புக்கு விலை மதிப்பே இல்லை. துறையூரில் வைத்திருந்த மிதி வண்டியும் லாரியில் வந்து சேர்ந்தது. அதைச் சரிப்படுத்திக்கொண்டு கல்லூரிக்குப் போய்வரப் பயன்படுத்திக் கொண்டேன். அவதி அவதியாகக் குறித்தகாலத்தில் ஓடுவது,விரைவாகச்