பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலைத் தமிழில் பயிற்றல்-கருத்தரங்கம் 349” யான் பல்கலைக் கழக வளாகத்தில் தங்கியிருந்த ஆறு ஆார காலத்தில் உணவு விடுதி உணவு சரிப்பட்டு வர வில்லை. சுவை இருக்கட்டும்; வீட்டுணவு மீது ஆராக் காதல் கொண்டேன். மூன்று அன்பர்கள் ஒரு வேளை விருந்து அளித்தனர். முதலில் என் அரிய நண்பர் சோமலெ ஒருநாள் இரவு உணவுக்கு அழைத்திருந்தார். பிறிதொரு நாள் ஞாயிறன்று பதிவாளர் T. D. மீனாட்சி சுந்தரம் , ஆல் உணவுக்கு அழைத்திருந்தார். இவர் எனக்கு திருச்சி யில் ஒரு சாலை மாணாக்கர். முதல் மனைவி ஏதோநோய் வாய்ப்பட்டுத் திருமணம் புரிந்த இரண்டுமூன்றாண்டுகளில் திருநாடு அலங்கரித்து விட்டார் (30-12-1943). அப். போது அவர் அடைந்த சொல்லொணாத் துக்கத்தை நான் அறிவேன். இந்தப் பெரும் பிரிவுபற்றிக் கவிமணி அவர்கள் கூட ஒர் இரங்கற்பா பாடியுள்ளார். மண்ணில் இனிய வாழ்வினுக்கு வாய்த்த நல்ல துணையென்ன எண்ணி யிருந்த மணவாளன் ஏங்கி ஏங்கி உளம் வருந்தக் கண்ணிற் காணா விண்ணுலகம் கடந்து சென்ற தேன்? அம்மா வண்ணக் கிளியே! மடமயிலே! மாதர் மணியே! சகுந்தலையே! என்பது பாடல் . ஒய்வு பெற்ற பிறகு பன்றி மலை சுவாமி களிடம் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இப்போது (1989) இவர் இல்லை; பல ஆண்டுகட்கு முன்னரே சிவப்பேறு அடைந்துவிட்டார். சோமலெயும் இவரும் கீரியும் பாம்பும் போல அவ்வளவு ஒற்றுமை! நான் பல்கலைக் கழக வளாகத்தில் இருந்தபோதே சோமலெ. வேலையை விட்டு விலகிக் கொண்டார். ஒரே நாளில்