உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.பல்கலைக் கழகத்தில் நுழைய முயற்சி 35互 வதற்கு முன்னே மாணவர்கள் புயல்போல் கிளம்பிக் கலரும் விளைவித்ததையும் மேசை நாற்காலிகளையெல்லாம் உடைத்தெறிந்ததையும் கேள்வியுற்றேன். காரணம் தெரிய வில்லை. இதற்குள் வண்டியும் கிளம்பிவிட்டது. நானும் மறுநாள் காலையில் காரைக்குடி வந்தடைந்தேன், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலகத் தைப் பற்றிய செய்தியும் வெளியாகி இருந்தது; விவரமாகத் தெரிவிக்கப் பெற்றும் இருந்தது. இப்போது (1989) அதை நினைவுகூர முடியவில்லை. குமிழி-1 49 42. பல்கலைக் கழகத்தில் நுழைய முயற்சி ஒரு சமயம் அழகப்பா கல்லூரி نهج -1958 முதல்வர் அலெக்ஸாண்டர் ஞானமுத்துவிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது உங்கள் படிப்புக்கும் திறமைக்கும் தகுந்த முன்னேற்றம் அடைய வேண்டுமானால், நீங்கள் கலைக் கல்லூரி (முதுகலை பயிற்றப்படும் கல்லூரி) அல்லது பல்கலைக் கழகம் இவற்றில் நுழைய முயல வேண்டும்’ என்று அறிவுரை கூறினார். நானும் பதவி உயர்வு பெற்றதிலிருந்து பல இடங்களுக்கு முயன்றேன்:. கிடைக்கும் ஊழ் நேரிடவில்லை. பின்னால் தன் திருவடி வாரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணி கொள்ளலாம் என்று அந்த ஏழுமலையான்ே திருவுள்ளம் கொண்டிருத்தல் வேண்டும் என்று இப்போது நினைக்கத் தோன்றுகின்றது. முதலில் மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு விண்ணப்பம் அனுப்பினேன். திரு. ராய. சொ. அவர்கள். பரிந்துரையையும் பெற்று அனுப்பினேன். பலன் இல்லை.