பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.54 நினைவுக் குமிழிகள்-3 துரைப் பிள்ளையைத் துணைப் பதிப்பாசிரியராகவும் நியமித்தமை சரி என்று என் மனம் அமைதியடைகின்றது. எனக்குக் கிடைக்காதது பற்றி வருத்தப்படவில்லை. பல்வேறு முயற்சிகளில் வெற்றி காணாதது இறைவன் எனக்குப் பரிந்துரைக்கச் சரியான பின்னணி இல்லாது செய்து விட்டான் என்பதுதான் நான் அதுபவத்தில் கண்ட உண்மை. இந்த நியமனங்கள்பற்றி நான் கொண்ட கருத்தையே பேராசிரியர் அ. சீநிவாச ராகவன் அவர்களும் (பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினர்) என்னிடம் தெரிவித்து ஆறுதல் கூறினார்கள். அகராதித்துறை பற்றிய பேட்டிக்கு வல்லுநர் குழுவில் தனிநாயகம் அடிகள், டாக்டர் மு. வரதராசன் வந்திருந் தார்கள். இன்னும் சிலரும் வந்திருந்தனர். அவர்கள் பெயர்களை நினைவுகூர முடியவில்லை . தனிநாயக அடிகள் மட்டிலும் கேட்ட இரண்டு வினாக்களையும் அவற்றிற்கு நான் அளித்த விடைகளையும் நினைவுகூர முடிகின்றது. வேறு ஒருவரும் கேட்கவில்லை. த.அ : Acclimatise-க்குத் தமிழில் பொருள் சொல்ல (էքւգ Ակւնո ? நான் : திடீரென்று கேட்டால் சொல்ல முடியாது. யோசித்தால் சொல்லலாம். அதுவும் சரியாக அமையும் என்று சொல்லமுடியாது. ’’ த.அ : கலைச் சொற்களை எப்படி உண்டாக்குகின்றீர்கள்? கான் : வாழ்க்கையில் பல துறையில் பணியாற்று வோர்களிடம் பழகி அவர்கள்மூலம் ஏதாவது கிடைக்குமோ என்று பார்க்க வேண்டும். முடியும்வரை முயல வேண்டும். வேதியியல் போன்றவற்றிலுள்ள சொற்களை அப்படியே வைத்துக்கொள்வது முறை. சிறிது நேரம் கொடுத்தால் என் அநுபவத்தில் கண்ட சிலவற்றைச் சொல்லுவேன். (நேரம் கொடுக்கப் பெற்றது). -