பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 நினைவுக் குமிழிகள்-3 மின்னி, Mason-எதிரியல் மின்னி-என்ற பெயர் களைச் சூட்டினேன். இஃது என்னுடைய ஒருவித முயற்சியேயன்றி முடிவானதன்று. ’’ என்று சொன் னேன் , வல்லுநர் குழு என் முயற்சியைப் பாராட்டியது. ஆனால் அகராதித்துறையில் பணி வாய்ப்புதான் கிடைக்கவில்லை! இதுவும் இறைவன் திருவுள்ளம் போலும் என்று நினைத்து அமைதி: கொண்டேன். இதைத் தவிர மூன்று முறை சென்னைப் பல்கலைக் கழகத்தில் நுழைய முயன்றேன். மூன்று முறையும். கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணத்தால் கிடைக்காத நிலை ஏற்பட்டது. பரிந்: துரைக்கும் பின்னணி இல்லாமையே காரணம் என்பது தெளிவு. பதவியில் அமர்ந்தவர்கட்கெல்லாம் பின்னணி இருந்தது. திருவேங்கடவன் பல்கலைக்கழக விளம்பரம் வந்ததுதமிழ் விரிவுரையாளர் பதவிக்கென்று. விண்ணப்பித்தேன். பேட்டி அப்பல்கலைக் கழகத்துணைவேந்தர் எஸ். கோவிந்தராஜூலு நாயுடுவின் சென்னை இல்லத்தில் (ஆர்மஸ் சாலை, கீழ்ப்பாக்கம்) நடை பெற்றது. பேட்டி வல்லுநர் குழுவில் திரு T.M. நாராயணசாமி பிள்ளையும் டாக்டர் கு.மா. அ. துரை அரங்கசாமியும் அமர்ந்திருந்தனர். திரு ரா. பி. சேதுபிள்ளை வருவதாக இருந்து, அவர் உடல் நலம் சரியில்லாமையால் அவருக்குப் பதிலாக துரை அரங்கசாமி வந்திருப்பதாக அறிந்தேன். பதினெண்மர்கள் பேட்டிக்கு வந்திருந்தனர். எல்லோரும் 30 அகவைக்குக் கீழானவர்கள்; நான் ஒருவனே40 வயதைத் தாண்டியவன். என்னைதான் இறுதியில் அழைத்தனர். 18 பேர்களில் மூவரை நினைவு கூர முடிகின்றது. K. குமாரசாமிராஜா (அப்போதுஆந்திரபல்கலைக் கழகத்தில் ஆய்வுமானவர்), P. பாலசுப்பிரமணியம் (அப்பேர்து அறிவியல்மாதப் பத்திரிகையான அணுக்கதிர் என்பதன் ஆசிரியர்)சி. பால. சுப்பிரமணியம் (பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் Tutor).