பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்கலைக் கழகத்தில் நுழைய முயற்சி 357 என்னைத்தான் இறுதியில் பேட்டிக்கு அழைத்தனர். என் பேட்டியில் அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். பல வினாக்கள் விடுக்கப்பெற்றன. முப்பத்தோரு ஆண்டுகட்கு முன் நடைபெற்ற பேட்டியாதலின் இப்போது (1989) நினைவுகூர முடியவில்லை. நாராயணசாமிப் பிள்ளை மட்டிலும், கேட்டது நினைவில் உள்ளது. அவர் " கம்பனின் புகழுக்குக் காரணம் என்னவாயிருக்கும் என்று தாங்கள் கருதுகின்றீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு நான் 'கம்பனுக்குப் புகழ் வந்தது அவன் இயற்றிய இராமாயணம் என்ற காவியத்தால்தான். தேர்ந்தெடுத்த பொருள் பரம்பொருளே இராமனாக வந்தான் என்று கொண்டமை. பக்தி இயக்கத்தின் விளை வாக எழுந்த ஆழ்வார்களின் பாசுரக் கருத்துகளை மேற் கொண்டமை, ஆங்காங்கே இலைமறை காய்கள் போல வைணவ தத்துவக் கருத்துகளைப் பெற வைத்தமை போன்றவையே அவன் புகழுக்குப் பின்னணியாக அமைந் தவை என்று கருதலாம். இது பற்றி வையாபுரிப் பிள்ளை * காவிய காலம்' என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளார்' என்றேன். உடனே டாக்டர் துரைஅரங்கசாமி மிஸ்டர் ரெட்டியார், வையாபுரிப்பிள்ளையின் கருத்துகட்கெல்லாம் தாங்கள் உடன் படுகின்றீர்களா?' என்று வினவினார். ஆராய்ச்சி விருப்பு வெறுப்பற்ற முறையில் இருக்க வேண்டும். அத்தகைய முறையைக் கையாண்டு ஆய்வு முடிவுகளைக் கூறுபவர்கள் நம் நாட்டில் இல்லை. வையாபுரிப் பிள்ளை அவர்களும் இதற்கு விலக்கு இல்லை. ஆனால் அவர் சிறந்த ஆராய்ச்சியாளராக இருப்பினும், சில கருத்துகள் அறிஞர்களால் ஒப்புக் கொள்வனவாக இல்லை, பெரும்பாலானவை நல்ல முடிவுகளே. இவ்வாறு ஒப்புக் கொள்வதால் என் விருப்பு வெறுப்புகளும் கலந்து விட்டனவா என்ற ஐயமும் என்பால் உண்டு. ஒருகால் தாங்கள் சிலவற்றிற்கு உடன்படாவிடில், தங்கள் விருப்பு