பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நினைவுச் சிதறல்கள் 359 இவர்கள் யாராவது ஒருவரைப் போட்டால் சூழ்நிலையில் எளிதாகப் பிடிப்பு ஏற்படும் என்று துணைவேந்தர் கருதி யிருக்கக்கூடும். நாங்கள் மூவரும் மெதுவாக நடந்து கொண்டே தாசப்பிரகாஷ் சிற்றுண்டி விடுதிக்கு (பூவிருந்தவல்லி சாலையில் உள்ளது) வந்து சிற்றுண்டி காஃபி கொண்டு பிரியா விடையுடன் பிரிந்து சென்றோம். இப்போது (1989) K.குமாரசாமி ராஜா டாக்டர் பட்டம் பெற்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பேராசிரியராகவும், P. பாலசுப்பிரமணியம் தில்லி பல்கலைக் கழகத்தில் ரீடராகவும் பணியாற்றி வருகின்றனர். இரண்டு திங்களுக்கு முன்னர் (அக்டோபர் 89) டாக்டர் K. குமாரசாமி ராஜா எங்கோ மறைந்து விட்டார்; தேடி வருகின்றனர். டாக்டர் சி. பாலசுப்பிர மணியம் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் (மொழி) தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்து வருகின்றார். நான் பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்னர் அக்டோபர் (1978) ஒய்வு பெற்று ஒய்வு ஊதியம் இன்றி அண்ணா நகரில் குடியேறி சொந்த இல்லத்தில் என் மூத்த மகனுடன் வாழ்ந்து வருகின்றேன். தமிழ்ப் பணியிலும் சமயப் பணியிலும் நூல் எழுதி வெளியிடுவது மூலமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டு அமைதியாக வாழ் கின்றேன். குமிழி-150 43. நினைவுச் சிதறல்கள் பல்லாண்டுகள் கழித்து நினைவுகூரும் போது எத்தனையோ நிகழ்ச்சிகள், செய்திகள் மறந்து போகின்றன. நினைவிலிரும் சிலவற்றை ஈண்டுக் குறிப்பிடுவேன்.