பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 நினைவுக் குமிழிகள்-3 இக்காலத்தில் ஆண்கள்-பெண்கள் சேர்ந்து படிக்கும் வாய்ப்புகள் உள்ளன; பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், ஆய்வுக் கூடங்கள் இங்கெல்லாம் இவ்வாய்ப்புகளைக் காணலாம். அலுவலகங்களில் இவர்கள் சேர்ந்து பணியாற்றுகின்றனர். ஆபாசப் படக் காட்சிகளை இவர்கள் காண நேரிடுகின்றது. பேருந்துகள், இருப்பூர்திகள்-இங்கெல்லாம் சேர்ந்து பயணம் செய்கின்றனர். சுவரொட்டிகள், ஆபாச விளம்பரங்கள், ஆபாசக் காதற் கதைகள் இவர்கள் கண்ணில் படுகின்றன; படித்து மகிழ்கின்றனர்; சுருக்க மாகக் கூறினால் எங்கும் காதலுணர்வைத் துரண்டும் சூழ்நிலைகள் நிலவுகின்றன. வரதட்சினைக் கொடுமை யினால் முப்பது வயது வரைகூட சில பெண்கள் திருமணம் இன்றி முதுகன்னியராக வாழ்கின்றனர். அதுவும் அலுவல் பார்க்கும் பெண்களாக இருந்து, முதுமை நிலையில் வேறு வருமானமின்றித் தவிக்கும் பெற்றோர்கள் தம் பெண்கள் திருமண விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவதில்லை. முதல் தாரத்துப் பெண் பிள்ளைகள் சிற்றன்னையின் கொடுமைக்கு உள்ளாகின்றனர். இந்தச் சூழ்நிலைகளில் தான் காதல் மணம், கலப்பு மணம், உடன்போக்கு முதலியவைகள் நடைபெறுகின்றன. " மனமகன், மணமகள் தேவை” என்ற விளம்பரங்களைப் பார்த்தே பல பெண்கள் தம் திருமணத்தை முடித்துக் கொள் கின்றனர். முதியோர்கள் தம் பொறுப்பை மறந்த குற்றத்தைச் சிந்தியாது, இத்தகைய திருமணம் புரிந்து கொண்டவர்கள்மீது சீறுகின்றனர்; சினக்கின்றனர். காரைக்குடியில் எஸ். இரத்தினம் என்ற ஆசிரியர் அழகப்பா மாதிரி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். இவர் உயர்நிலைப் பள்ளியில் என் மாணாக்கர். .திருச்சிக் கல்லூரியொன்றில் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு சைதையில் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பி.டி. பட்டம் (இப்போது பி.எட்) பெற்றவர். இந்தப் பள்ளியில்