பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.3 8) நினைவுக் குமிழிகள்-3 வாக இருந்தன. தாய்மொழி மூலம் கல்வி தருவதில்தான் கருத்து வேறுபாடுகள் நிறைந்திருந்தன. ஒளியைக் காண் பதை விட வெப்பத்தைத்தான் அதிகமாக உணர்ந்தோம். ஆங்கிலத்தை பயிற்று மொழியாகப் கொள்வதை விட இந்தி மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்வதே சிறப்பு என்ற போக்கில்தான் பொழிவுகள் அமைந்திருப் பதைக் கண்டோம். ஆங்கில வெறுப்பும் இந்தி வெறியும் தெளிவாகத் தெரிந்தன. இரண்டு நாட்கள் மாலை 2மணி முதல் பேருந்துகள் மூலம் பல இடங்களுக்கு எங்களை இட்டுச் சென்று காட்டினர். நர்மதைநதியும் பளிங்குப் :பாறைகளும் (Marble rocks) என் உள்ளத்தைக் கவர்ந்தன. ஜபல்பூர் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. மாநிலங்கள் அமையும்போது ஜபல்பூரைத் தலைநகராக்க முயற்சி நடைபெற்றதாகவும், இந்த ஊரை விட போபால் சிறந்ததாக இருப்பதைக் கண்டு அதையே தலை நகராக அமைத்ததையும் கேள்விப்பட்டோம். மாலை நிகழ்ச்சிகட்குப் பிறகு அங்காடித் தெருவில் சுற்றினோம். திறமையான வணிகர்களைக் காணும் வாய்ப்புகள் கிடைத் தன. சாமான்களை வாங்குவோரின் தலையில் கட்டுவதற்கான சாமர்த்தியப் பேச்சு, அடிக்கடி தேநீர் வழங்கும் பாங்கு இவற்றையெல்லாம் கண்டோம். கம்பளி ஆடைகளின் அங்காடிகள்தாம் அதிகமாக இருந் தன. அவரவர்கட்குத் தேவையான பொருள்களை வாங்கினர். என் சிறுவர்கட்குச் சில சாமான்கள், என் அன்னையாருக்கு 6 கெஜம் வெண்பட்டு, என் துணைவிக்கு ஒரு சேலை, எனக்கு ஒரு நேரு கோட் (கம்பளியில்) வாங்கிக் கொண்டேன். பயணச் செலவுகட்கு வேண்டிய பன்னத்திற்கு மேல் ரூ.500 = அதிகமாகக் கொண்டு சென்ற தால் இவற்றையெல்லாம் வாங்க முடிந்தது. திரும்பு வதற்கு இருப்பூர்தியில் அவர்க்ளே இடஒதுக்கீடு செய்வதில்