உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுக் குமிழிகள்-3.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 நின்னவுக் குமிழிகள்-3 நன்னிலையில் இருப்பதையும், காரைக்குடியில் சிறு பிள்ளைகளாக இருந்த இவர்தம் அருமை மக்கள், வளர்ந்து, நல்ல கல்வி பெற்று நல்ல வேலைகளில் அமர்ந்து நன்னிலை யில் உள்ளார்கள் என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். காரைக்குடியில் அறிமுகமான இன்னொரு அரிய நண்பர் புதுமைப் பதிப்பகம் அ. லெ. நடராசன். நல்ல நல்ல நூல்களை வெளியிட்டுப் பெரும் புகழ் பெற்றவர். தமிழ்க்கடல் ராய. சொ வுக்கு மிகவும் நெருக்கமானவர். நான் இவருடன் அறிமுகமானபோது பதிப்பகம் சரியாக இயங்கவில்லை. நல்ல உழைப்பாளி. எழுத்தாளர்களை நன்கு மதிக்கும் பதிப்பாளர், இவரும் 1960 - வாக்கில் சென்னைக்குக் குடியேறி விட்டார். இவரே எழுத்தாள ராகிப் பல நூல்களை வெளியிட்டுள்ளார். 1957-இல் இவருக்கு எடித் ஸ்ப்ரெளல் எழுதிய The Science Book o£ #łunyan Anatomy 6T 63T @ g5TG:)@ @LE T#ì (GL¡u i fïšgš கொடுத்தேன். அது 1958 இல்- மானிட உடல் என்ற தலைப்பில் மிக அழகாக வெளி வந்தது (ஏப்பிரல்-1958). இஃது என் ஆறாவது வெளியீடு, ராய. சொ.வுடன் ஒரு இவர் வீட்டில் விருந்துண்டது இன்னும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. இப்போது 1989; இவர் தியாகராய நகரில் (வடக்கு)-பாரதிநகர் என்ற பகுதியில் வாழ்ந்துவருகின்றார். r கல்லுக்கட்டியில் (மேற்கு) ரெ. முத்துக்கணேசன் என்ற தன வைசிய இளைஞருடன் அறிமுகம் ஆனேன். நல்ல தமிழ் ஆர்வலர்: கவிபாடும் ஆற்றல் வாய்ந்தவர். சிறுசிறு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் <T$$$Ì ಓ.! ந ைட யி ல் உரை எழுதி வெளியிட்ட முத்தொள்ளாயிரப் பதிப்பு மிகவும் தரமானது. சதா தமிழ்ப் புலவர்கள் சூழ இருப்பவர். இவருடன் உரையாடிக் கொண்டிருப்பது நல்ல பொழுது போக்கு. பேச்சில் பொதுவாக நாட்டு நடப்புகள் பங்கு பெற்றாலும் இலக்கியம் பற்றிய குறிப்புகளே அதிகமாக இடம் பெறும்.